Header Ads



தேர்தலில் சாதனை படைக்குமா, ராஜபக்ச குடும்பம்..?

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ராஜபக்சவினர் இலங்கை அரசியலில் சாதனை ஒன்றை படைக்க தயாராகி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன் என நான்கு பேர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதன் மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட உள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ளதுடன் அவரது மூத்த புதல்வர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட உள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் சகோதரரான அமைச்சர் சமல் ராஜபக்ச ஹம்பாந்தோட்டையில் போட்டியிட உள்ளதுடன் அவரது, புதல்வரும் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஷசீந்திர ராஜபக்ச மொனராகலை மாவட்டத்தில் போட்டியிட உள்ளார்.

இவர்கள் நால்வரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால், இலங்கை நாடாளுமன்றத்தில் இரு ஜோடி தந்தை மற்றும் மகன்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதல் முறை என வரலாற்றில் பதியப்படும்.

இதற்கு முன்னர் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் ஒரே நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த போதிலும் மேற்கூறிய பிரதிநிதித்துவத்தை போன்று இருந்ததில்லை.

இதனை தவிர ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த கோட்டாபய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார். அத்துடன் அவரது சகோதரான மகிந்த ராஜபக்ச பிரதமராகவும் முக்கிய அமைச்சு பதவிகளையும் வகித்து வருகிறார். அவரது மூத்த சகோதரான சமல் ராஜபக்ச அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சராவார்.

இந்த நிலையில் அடுத்த புதிய நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபச்ச, சமல் ராஜபச்ச, நிருபமா ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, ஷசீந்திர ராஜபக்ச ஆகியோர் அங்கம் வகிப்பார்கள்.

ராஜபக்ச குடும்பத்தின் முக்கியஸ்தரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ச இரட்டை குடியுரிமையை கொண்டுள்ளதால், அடுத்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காவிட்டாலும் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பை வகிப்பார் எனக் கூறப்படுகிறது.

2 comments:

  1. Last general election Mahinda kurunagala mp, Namal Hambantota,
    Rajitha kalutura mp,son Chatura senaratna Gampaha district mp.
    Didnt you know this?

    ReplyDelete
  2. From two different families. Record is for from same family

    ReplyDelete

Powered by Blogger.