Header Ads



மாளிகாவத்தை துயர்மிகு சம்பவம் - பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் விளக்கம்

கொழும்பு, மாளிகாவத்தை இன்று -21- பிற்பகல் சன நெரிசலினால் மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன்,

இன்று பிற்பகல் ஒரு மணியளவில் வர்த்தகர் ஒருவரினால் அன்பளிப்பாக நிதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோன்பு பெருநாளை முன்னிட்டு இந்த பணம் பகிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெஹிவளையை சேர்ந்த வர்த்தகர் மாளிகாவத்தைக்கு பணி நிமித்தமாக செல்ல வேண்டும் என மாத்திரம் கூறி அனுமதி பெற்றுள்ளார்.

மாளிகாவத்தையில் உள்ள அவரது வாகன உதிரிபாகங்கள் களஞ்சியப்படுத்தும் இடத்திற்கு குறித்த வர்த்தகர் மேலும் நால்வருடன் இன்று காலை சென்றுள்ளார்.

அங்கு சென்றவர்களை மக்களை ஒன்று கூட்டி இன்று பிற்பகல் பணம் வழங்குவதாக அறிவித்துளார். இதன் போது அவ்விடத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.

பணம் வழங்க ஆரம்பித்த பின்னர் யாரும் வெளியே செல்ல வேண்டாம் இரண்டாவது முறையும் வழங்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்ட மக்கள் முட்டி மோதிக் கொண்டுள்ளனர்.

இதனால் 3 பெண்கள் உயிரிழந்ததுடன் 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றின் ஆபத்து உள்ள நிலையில் எவ்வித அனுமதியும் பெறாமல் இவ்வாறு மக்களை ஒன்று கூட்டப்பட்டுள்ளது.

மக்களுக்கு இடையில் ஒரு மீற்றர் தூரம் இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவிக்கப்பட்டதனை கண்டுக்கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக வர்த்தகர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூடிய இடம் ஒன்றிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.