Header Ads



ராஜித்த கூறிய முதலை, கதையின் பலனை தற்போது அனுபவிக்கின்றார் - பந்துல

(ஆர்.யசி)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றியில் வடக்கு கிழக்கில் இலட்சக்கணக்கான  மக்கள் வாக்களிக்க இருந்த நிலையில் அவர்களை தடுத்த பாவத்தை ராஜித சேனாரத்ன அனுபவிப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நேற்று, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவின்  கைது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போதே அமைச்சரவை இணைபேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

எனது பழைய நண்பர் ராஜித சேனாரத்ன,  ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் முன்வைத்த சில காரணிகள் மிகவும் பாரதூரமானது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மக்களை கொன்று சாட்சியங்களை அழித்து அவர்களை முதலைகளுக்கு உணவாக கொடுத்தார்.

அவ்வாறு செய்வதை நாம் பார்த்துள்ளோம் என சாட்சியம் இரண்டையும் கொண்டுவந்து பொய் காரணிகளை கூறியது மட்டுமல்லாது, வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எமக்கு வழங்கவிருந்த வாக்குகளையும் முழுமையாக இல்லாது செய்தார்.

வடக்கு கிழக்கில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இந்த காரணத்தினால் அச்சத்திற்கு ஆளானார்கள். கொல்லப்பட்டவர்களின் உடல்களை முதலைக்கு போடுகின்றார் என ராஜித கூறிய காரணியை கேட்டதும் அம்மக்களின் உடலில் ரோமங்கள் சிலிர்த்துக்கொள்ளும் அளவிற்கு ராஜித பொய்களை கூறினார். அரச ஊடகங்களில் எந்த நேரமும் இதனை தெரிவித்துக்கொண்டிருந்தார். ஆகவே அவர்கள் செய்த பாவத்திற்கு நியாயமான விதத்தில் நடக்கும் பிரதிபலன்களுக்கு எம்மால் எதனையும் கூற முடியாது.

No comments

Powered by Blogger.