Header Ads



பயிற்சியில் ஈடுபடும் இலங்கை, வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்..!


கொரோனா ஊரடங்கு காலத்தில் பயிற்சியின் போது வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து இந்திய விளையாட்டு ஆணையம் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டு இருக்கிறது.

அதில் விளையாட்டு வீரர்கள் வெளிப்புற மைதானத்தில் தனி பயிற்சியாளர் மேற்பார்வையில் அரசு அறிவுறுத்தி இருக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பயிற்சியில் ஈடுபடலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த பட்டியலில்,

முககவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட விஷயங்களை முறையாக பின்பற்ற வேண்டும்.

பயிற்சி பெறும் வீரர்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பயிற்சி மையத்தின் நுழைவு வாயிலில் இருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

குத்துச்சண்டையில் பார்ட்னருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவும், தொடர் ஓட்டத்தில் ‘பேட்டனை’ மற்ற வீரருடன் மாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் நீச்சல் குளத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வப்போது வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டும்.

அனைத்து வீரர்களும், ஊழியர்களும் ஆரோக்கிய சேது செயலியை முறையாக பயன்படுத்த வேண்டும்.

No comments

Powered by Blogger.