Header Ads



சில முஸ்லிம் பகுதிகளுக்கு ஈச்சம்பழங்கள், இதுவரை பகிர்ந்தளிக்கப்படவில்லை - மக்கள் விசனம்


- எஸ்.எம்.எம்.முர்ஷித் -

புனித நோன்பினை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்கென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினூடாக வழங்கப்பட்ட ஈச்சம்பழங்கள்; கல்குடாத் தொகுதி முஸ்லீம் பிரதேசத்தில் சில பகுதிகளுக்கு இதுவரை பகிர்ந்தளிக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஈச்சம்பழங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி முதலாவது நேன்புடன் வழங்கப்பட்டுள்ளது.

ஈச்சம் பழங்கள்; பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக கல்குடா ஜம்இய்யத்து உலமா சபையிடம் வழங்கப்பட்டு, அவர்களால் பிரதேச பள்ளிவாயல் நிருவாகங்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சில பள்ளிவாயல்கள் மக்களுக்கு வினியோகித்த நிலையில் அதிகமாக பிரதேசங்களில் ஈச்சம் பழங்கள் பங்கிடப்படாமல் உள்ளது.

ஆனால் தற்போது நோன்பு பதினாறைக் கடந்துள்ள போதிலும் கல்குடாத் தொகுதி முஸ்லீம் பிரதேசத்தில் சில பகுதிகளுக்கு மாத்திரம் ஈச்சம் பழங்கள்; இதுவரை பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் மக்கள் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு உலகத்தினை ஆண்டிப்படைக்கும் கொரோணா நோய் காரணமாக மக்கள் அன்றாட கூலித் தொழில் செய்ய முடியாமல் வறுமையில் இருக்கும் இச்சந்தர்பத்தில் இலவசமாக கிடைக்கும் பொருட்களை மக்களுக்கு வழங்காமல் தாமதிப்பது அம்மக்களுக்கு செய்யும் அநியாயம் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

1 comment:

  1. ஈஐசம்பலம் குடுபட்டதை பங்கிட முடியாத நிலை பள்ளிகளுக்கு உன்டு...
    எமது பள்ளிவாயல் சுமார் 350 குடும்பம்..
    கிடைக்கப்பெற்றது 59 kg....
    (Fifty nine kg only)
    இந்த பழத்தை எப்படி பகிர்ந்தளிக்க முடியும்...
    இதனால் பள்ளி நிர்வாகம் தடுமாற்றத்தை எதிர் கொண்டுள்ளது....
    யாருக்கு கொடுப்பது ???
    எப்படி கொடுப்பது.???
    .........
    இதன் விபரம் தெரிந்தவர்கள் கூறலாம்...

    ReplyDelete

Powered by Blogger.