Header Ads



பாதாள உலகத் தலைவன் உள்ளிட்ட 8 பேர் கைது - பொலிஸார் அதிரடி

(எம்.எப்.எம்.பஸீர்)

பாதாள உலக தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ஆமி சம்பத் உள்ளிட்ட 8 பேரை வெள்ளம்பிட்டி பொலிஸார் நேற்று முன்தினம் (14.05.2020) இரவு கைது செய்துள்ளனர். வெல்லம்பிட்டி களுபாலம் பகுதியில் வீடொன்றில் இருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 வெல்லம்பிட்டி பொலிஸாருக்கு, களுபாலம் பகுதி வீடொன்றில் குழுவொன்று  போதைப்பொருள் பயன்படுத்துவதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய  திடீர் சுற்றிவலைப்பு நடாத்தப்பட்டுள்ளது. இதன்போதே அங்கிருந்த 8 பேரையும் தனித்தனியாக விசாரித்த போது, அதில் ஒருவன் ஆமி சம்பத் என தெரியவந்துள்ளது.

 இதன்போது ஆமி சம்பத்திடம் இருந்து  ஊரடங்கு அனுமதிப் பத்திரம் ஒன்றும் இருந்துள்ளதுடன், அது முகக்கவசங்களை விற்பனைச் செய்ய என அத்தியாவசிய தேவைக்காக கம்பஹா பொலிஸ் வலயத்தின் பொலிஸ் நிலையம் ஒன்றினால்  வழங்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

 தெமட்டகொடை பகுதியில், பாதாள உலக தலைவனான தெமட்டகொட சமிந்தவை சிறைச்சாலைக்கு அழிஅத்து ச்செல்லும் போது சிறைச்சாலை பஸ் வண்டி மீது துப்பககிச் சூடு நடாத்தி,  அவரை கொலைச் செய்ய முயன்றமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஆமி சம்பத் ஆவார். இந்நிலையில் மேல் மாகாணத்தின் தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்  கபில கட்டுபிட்டி, நுகேகொடை பொலிஸ் வலயத்தின்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லக்சிறி கீதால் ஆகியோரின் மேற்பார்வையில் 4 பொலிஸ் குழுக்கள் சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.