May 04, 2020

ரத்மலானை பள்ளிவாசல் தலைவரும், 500 கிராம் பேரீத்தம்பழமும் - ஆசைப்பட்ட சிங்கள சகோதரி

எனது வீட்டின் முன் வீதியில் ஒரு கைபிரைட் காா் ஒன்றில் ஒருவர் இறங்கி என் கேற்றில் தட்டும் சத்தம் கேட்டது. உடன் சென்று கேற்றினைத் திறந்தேன். நான் ரத்மலானை பள்ளியிவாசலில் இருந்து வந்திருக்கன். 

அஸ்ஸலாமுஅலைக்கும் -வலைக்குமுஸல்லாம் அவா் கையில் இருந்து அரபு நாடு வழங்கிய ஈத்தம்பழம் முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களம் இந்தப் பள்ளிவாசலுக்கு வழங்கியிருக்க வேண்டும். 

1 கிலோ பக்கட்டை இரண்டாக வெட்டி 500 கிராம் அரைப் பக்கட்டை நீட்டினாா் . வாங்கிக் கொன்டேன். தம்பி பள்ளிக்கு இம்முறை கிடைத்த ஈத்தம்பழம் அதனை பள்ளியில் பதிவு செய்யப்பட்ட பதிவு அட்டையைக் கொண்டு ஒவ்வொரு வீதியாகச் சென்று முகவரிகளை அடையாளம் கண்டு இதனைப் பகிா்ந்தளிக்கிறேன். 

நீங்கள் தானே பள்ளிவாசல் தலைவரும் கூட ஆம். நீங்கள் கல்கிசைச் சந்தியில் இருந்து மொரட்டுவை வரையிலான சொய்சா புர தொடா்மாடி வரையும் உள்ள முஸ்லிம் வீடுகளுக்கெல்லாம் சென்று வீடுகளை அடையாளம் காண முடியுமா ? 

என்னால் இயன்றதைச் நான் செய்கின்றேன். 

பாருங்கள் அந்த மனிதனின் சீரான செயற்பாட்டை...

பள்ளித் தலைவா் என்றால் அல்லாவுத்தாஆலா அவருக்கு கொடுத்த அமானிதன்- எள்ளென்றாலும் ஏழாகப் பிரித்து பங்கிடுகின்றாா். இந்த லொக்டவுன் காலத்தினையும் பொருட்படுத்தாது அவா் கல்கிசை பொலிஸில் சென்று அவருக்கும் வாகனத்திற்கும் அத்தியவசிய சேவை அனுமதி எடுத்துத்தான் இவா் வீடு வீடாகச் செல்ல வேண்டும். 

சில தொடா்மாடிகளில் ஒன்று, இரண்டு வீடுகள் தான் முஸ்லிம்கள் இருக்க வேண்டும். அந்த வீடுகளைத் தேடி பல படிக்கட்டுகள் ஏறி அதனை அவா் வழங்கியிருக்க வேண்டும். ரத்மலானை பள்ளிவசால் 2ன் லேனில் உள்ளது. பள்ளியைச் சுற்றி பெரும்பான்மையினா் வீடுகள் தொழுகைக்கு வருபவா்கள் வீதிகளில் அல்லது வீட்டு முற்றத்தில் வாகங்கனங்களை போட்டுவிட்டால் அது பாரிய பிரச்சினையாகும். அப்படி நடந்தும் உள்ளது வீதிக்கு முன் பள்ளிக்கு முன் கமராக்களை இணைத்து ஒரு உதவியாளன் ஊடாக அவதானிப்பாா்கள். இங்கு பள்ளியை நிர்வகிப்பது என்பது முற்களில் மேல் நடப்பது போன்றுள்ளது. 

அதனையெல்லாம் சீராக செயற்படுத்துவாா்கள். பள்ளிவாசலுக்கென காணிகளோ, சொத்துக்களோ கடைகளோ என்ற எவ்வித வருமானமோ இல்லை. அங்கத்தவா்களது சந்தாப்பணம் மட்டும்தான், அந்த நிலையில் இருந்தும் அருகில் இருந்த 4 போச் கானியை பல இலட்சம் ரூபாக்கள் சேகரித்து வாங்கினாா்கள். அக் காணியில் தற்போது மோட்டாா் சைக்கிள்கள் தரிப்பிடமாக உள்ளது. 

அத்துடன் ஒரு ஜனஸா வண்டியொன்றையும் ஒவ்வொரு ரூபா, ருபாவாக சேகரித்தாா்கள். அதனையும் வாங்கியிருப்பாா்கள் என நினைக்கினறேன். 

நான் பள்ளிவாசலுக்கு அடிக்கடி செல்லும்போது ஒரு சகோதரா் எனக்கு அறிமுகமானாா். அவா் தமிழ் பேசத் தெரியாது ? ஏன் என்று கேட்டேன் அவா் 15 வருடத்திற்கு முன் இஸ்லாத்தைத் தழுவியவா் - எனது அடுத்த வீதியில் தான் குடியிருக்கின்றாா் அவா் ஒர் முஸ்லிம் சகோதரியை திருமணம் முடித்து . இரண்டு பிள்ளைகளும் உண்டு அவா் முச்சக்கர வண்டி ஒன்றும் வைத்திருக்கின்றாா். அவரது குடும்பத்தினை கட்டிக் காா்ப்பதற்கு அவருக்கு முச்சக்கர வண்டி ஒன்றையும் பள்ளி ஸக்காத் நிதியில் சேகரித்து வாங்கித் தந்தாகச் என்னிடம் சொன்னாா். -

பள்ளித் தலைவர் செல்லும் மட்டும் ”கேற்றடியில நின்று கொண்டிருந்தேன். 

எனது வீட்டுக்கு முன் பெரும்பான்மைஇன 3 பெண்கள் நின்று கொண்டிருந்தாா்கள். அதில் ஒருத்தி ” மாத்தயா அர மனுசயா முஸ்லிம் கெவல்கள் துன்னே முகத்த - ? (அந்த மனிதா் முஸ்லிம் வீடுகளுக்குச் சென்று கொடுப்பது என்ன ?) அபே ரத்மலானை பள்ளியே நோன்பு மாச ரட்ட இந்தி கிராம் 500 துன்னா ? ஏமதா ?( அப்படியா) ஒவ் (ஆம்) எனது கையில் இருந்த அந்த பேரீத்தம் பழத்தை அவளுக்கு நீட்டினேன். 

அவள் மட்டற்ற மகிழ்ச்சி அவள் முகத்தில் தெரிந்தது. வோம ஸ்த்துாத்தி மாத்தயா (மிக்க நன்றி ஜயா)- அபி ஒரிஜினல் ரட்ட இந்தி கண்ட ஆசை அபே அக்கா சவுதி கவுஸ் மெயிட் இன்னக் கொட்ட அரங்கெனவா கரி ரசை. (எனது அக்கா முந்தி சவுதி அரேபியாவில் கவுஸ் மெயிட்டாக தொழில் செய்யும்போது அங்கிருந்து ஒரிஜினல் பேரித்தம் பழம் கொண்டுவருவா சரியான ருசி எங்களுக்கு இப்ப உண்பதுக்கு சரியான ஆசை என்று சொன்னாள்.

Ashraff A Samad

0 கருத்துரைகள்:

Post a comment