Header Ads



கடந்த 12 நாட்களில் இலங்கையில் எந்த, ஒரு தொற்றாளரும் சமூகத்திலிருந்து கண்டறியப்படவில்லை

(எம்.எப்.எம்.பஸீர்)

கடந்த 12 நாட்களாக இலங்கையில் எந்த ஒரு தொற்றாளரும் சமூகத்திலிருந்து கண்டறியப்படாமை விஷேட அம்சமாகும்.  கொரோனா அபாய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் எழுமாறான  பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் கடந்த 12 நாட்களில் சமூகத்திலிருந்து தொற்றாளர்கள் கண்டறியப்படவில்லை. இந்த 12 நாட்களில் கண்டறியப்பட்ட தொற்றாளர்கள் அனைவரும் கடற்படை,  தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து கண்காணிப்பின் கீழ் இருந்தவர்களாவர்.

கொரோனா வைரஸ் குடும்பத்தின்  கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் 499 கடற்படை வீரர்களும், கடற்படை வீரர்களின் உறவினர்கள் 38 பேரும்  பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள  நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 949 ஆக உயர்ந்துள்ளது.

1 comment:

  1. இந்த சாதகமான முன்னேற்றத்துக்கு வெறுமனே சுகாதாரம் சார்ந்த உத்தியோகஸ்தர்கள், டாக்டர்கள், தாதிமார் உற்பட ஏனைய நிறுவனம் சார்ந்தவர்களின் அயராத முயற்சி மட்டுமன்றி இந்த நாட்டில் கடந்த சுமார் மூன்று வாரங்களுக்கு மேல் பகல் முழுவதும் நோன்பு நோற்று இரவு முழுவதும் தமது வீடுகளில் இரவு நேரத்தொழுகைகள், நடுநிசித் தொழுகைகளில் இந்த நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள கோவிட் 19 ஆபத்துக்களில் இருந்தும் உலக நாடுகளில் கோவிட் 19 காரணமாக படும்துன்பங்கள் துயரங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்குமாறு அழுது கையேந்தி அல்லாஹ்விடம் செய்யும் பிரார்த்தனைகளின் பெறுபேறு என்பதையும் இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் அறிவிக்க தொலைத்தொடர்பு சாதனங்களும் ஏனைய ஊடகங்களும் பகிரங்கமாக அறிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.