Header Ads



கொரோனா எங்களுடன் நீண்டநாட்கள் இருக்கப்போகின்றது, விரைவில் முடிவிற்கு வரப்போவதில்லை - WHO

கொரோனா வைரஸ் நெருக்கடி கூடியவிரைவில் முடிவிற்கு வரப்போவதில்லை என உலக சுகாதார ஸ்தாபனம்  தெரிவித்துள்ளது.

பல நாடுகள் தற்போது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம்டெட்ரோஸ் அடனொம் கெப்பிரயேசஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நாங்கள் நீங்கள் தூரம் பயணிக்கவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் எங்களுடன் நீண்ட நாட்கள் இருக்கப்போகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ்தொற்றின் ஆரம்ப கட்டத்திலேயே பல நாடுகள் உள்ளன என குறிப்பிட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம்  உலகளாவிய நோய் தொற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நாடுகளில் மீண்டும் வைரஸ் பரவல் காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்க,மத்திய மற்றும் தென்அமெரிக்காவில் வைரஸ் பரவல் தொடர்பில் கவலைதரும்போக்குகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான நிதியை இடைநிறுத்தும் முடிவை டிரம்ப் நிர்வாகம் மறுபரிசீலனை செய்யும்  எ ன நம்பிக்கை வெளியிட்டுள்ள  உயிர்களை காப்பாற்றுவதற்கான எங்களின் முக்கிய பணிக்கு அமெரிக்கா மீண்டும் ஆதரவளிக்கும் எனவும் டெட்ரோஸ் அடனொம் கெப்பிரயேசஸ்தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இது முக்கியமான முதலீடு என கருதும் என நான் எதிர்பார்க்கின்றேன்,ஏனையவர்களை மாத்திரமல்ல அமெரிக்க உயிர்களை காப்பாற்றுவதற்கும்  அதனை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் இந்த நிதி உதவி முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. ITS MEANS YOUR ARE GUYS WISH PLAY WITH WORLD FOR LONG!

    ReplyDelete
  2. அவங்க முடிவெடுத்துட்டாங்க... ஆனா அவங்களுக்கும் மேலே ஒருத்தன் இருக்கான் என்பதை புறக்கணித்துவிட்டார்கள். அவங்க தொடங்கியது அவ்ரகளுக்கே ஆப்பாக அமையும். இன்ஷா அல்லாஹ்.. 🤲🤲

    ReplyDelete

Powered by Blogger.