Header Ads



நாட்டுக்கு தேர்தல் அத்தியாவசியமானது, அதனை விடவும் மக்களின் உயிர் பாதுகாப்பு முக்கியமானது


கொரோனா வைரஸ் தொற்று நீங்கப்பெற்று 35 நாட்களின் பின்னர் பொதுத் தேர்தல் நடத்துவது உசிதமானது என இலங்கையின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான பெப்ரல் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நீங்கியதாக சுகாதாரத் துறையினர் அறிவித்து 35 நாட்களுக்கு பின்னரே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவும் ஒரே நிலைப்பாட்டுடன் செயற்பட வேண்டியது அவசியமானது என பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு தேர்தல் அத்தியாவசியமானது என்ற போதிலும் அதனை விடவும் மக்களின் உயிர் பாதுகாப்பு அதனை விடவும் முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை இல்லாதொழிப்பது மற்றும் தேர்தல் நடத்துவது தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் காணப்பட்டால் அது குறித்து நீதிமன்றின் உதவியை நாட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.