Header Ads



உதவிக்கு ஓடிய, முஸ்லிம் இளைஞர்கள்


மத்திய பிரதேசம் இந்தூரில் துர்கா எனும் இந்து மூதாட்டி இறந்துவிட்டார்.

வறுமையான குடும்பம்.

வேறு வேறு இடங்களில் தினசரி கூலிகளாகப் பணியாற்றும் பிள்ளைகள் தாயின் மரணச் செய்தி கேட்டு எப்படியோ ஊருக்கு வந்துவிட்டாலும் இறுதிச் சடங்கு செய்வதற்கு அவர்களிடம் பணம் இல்லை.

கரோனா தொற்று அச்சத்தின் காரணமாக அக்கம் பக்கத்தில் உள்ள யாரும் அந்த மரண வீட்டை எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

ஊரடங்குக் காரணமாகப் போக்குவரத்து தடைபட்டிருப்பதால் இறந்த மூதாட்டியை இடுகாட்டிற்கு இட்டுச் செல்ல வாகன வசதியும் இல்லை.

கலங்கிப் போய் பரிதவித்து நின்ற துர்காவின் குடும்பத்திற்கு அந்தப் பகுதியிலுள்ள முஸ்லிம் இளைஞர்கள் உதவிக்கு ஓடிவந்தனர்.

இறுதிச் சடங்கிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து துர்காவின் உடலைப் பாடையில் வைத்து, முகக் கவசம் அணிந்த முஸ்லிம் இளைஞர்கள் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானம் வரை தூக்கிச் சென்றனர்.

அகில், அஸ்லம், முதஸ்ஸர், ரஷீத் இப்ராஹீம், இம்ரான் சிராஜ் ஆகிய இளைஞர்கள்தாம் எல்லா வேலைகளையும் முன்னின்று நடத்தினர்.

தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் முஸ்லிம் இளைஞர்கள் செய்த இந்த உதவி பலரையும் நெகிழ வைத்துள்ளது.

இந்த நிகழ்வைப் படங்களுடன் மபி முன்னாள் முதல்வர் கமல்நாத் தமது சிட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டு “இதுதான் நமது சகோதரத்துவப் பண்பாடு” என்று மனம் நெகிழ்ந்து கூறியுள்ளார்.

அந்த ஐந்து முஸ்லிம் இளைஞர்களுக்கும் பாராட்டுகள் குவிந்துள்ளன.

-சிராஜுல்ஹஸன்

2 comments:

  1. well done Brothers, May Allah bless all of you

    ReplyDelete
  2. ஆபத்தின் போது உதவ முன்வரும் இத்தகைய இளைஞர்களின் செயல் வெறுமனே மற்றவர்களின் அல்லது அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்தும் நோக்கம் அறவே கிடையாது. அதற்கு மாற்றமாக அவர்களைப் படைத்த இறைவனின் திருப்தியை அடைந்து கொள்ளும் நோக்கம் மாத்திரம் தான் அவர்களிடம் காணப்படுகின்றது. அத்தகைய இளைஞர்களைத் தான் இஸ்லாம் தோற்றுவித்திருக்கின்றது. அந்த பரந்த அல்லாஹ்வுக்காக உதவி செய்யும் மனம் உலகில் வேறு எந்த சமூகங்களிடமும் கிடையாது என்பதை ஏனைய சமூகங்களும் மக்களும் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.