Header Ads



டெங்கு அபாயத்தை நீக்குவதற்கு, ஒத்துழைப்பு வழங்குவோம்

டெங்கு நுளம்புகள் பரவும் வளாகங்களை சுத்தப்படுத்தி, அந்த அபாயத்தை நீக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வறட்சியான காலநிலை காரணமாக, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் குறைவாக காணப்பட்டது. தற்போது பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகியுள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நுளம்புகள் பெருகும் இடங்கள், தூய்மையான நீர் இருக்கும் பகுதிகள், மழைநீர் வழிந்தோடும் குழாய்கள் மற்றும் வீட்டை சூழவுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருங்கள். ஊரடங்கு சட்டம் காரணமாக, சூழல் மற்றும் வீட்டை தூய்மையாக வைத்திருப்பதற்கான சந்தர்ப்பம் உங்களுக்கு கிட்டியுள்ளது. இவ்வாறானவொரு சூழ்நிலையில், எமது சுகாதார பிரிவினருக்கு இது தொடர்பில் ஆராய்வது கடினமாக இருக்கும். நாம் வாழும் வீட்டை தூய்மையாக வைத்திருக்கும் பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.