Header Ads



ஜூன் 2 க்கு பின்னர் நாட்டில், சட்டரீதியான அரசாங்கம் இருக்காது - சஜின்

ஜூன் மாதம் 2ம் திகதியின் பின்னர் நாட்டில் சட்ட ரீதியான அரசாங்கமொன்று இருக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய ஜனநாயக முன்னணியின் தேசிய அமைப்பாளருமான சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இந்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் உதவியை நாடி தீர்வு பெற்றுக்கொள்ள நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவினால் பொது தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி நடாத்துவதாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் முதலில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் எதிர்வரும் ஜுன் மாதம் 2ம் திகதிக்கு முன்னதாக புதிய நாடாளுமன்றை கூட்ட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரையில் ஆட்சியிலிருக்கும் காபந்து அரசாங்கத்தின் சட்டபூர்வ தன்மை தொடர்பில் ஜூன் மாதம் 2ம் திகதியின் பின்னர் பாரிய சர்ச்சை நிலைமையொன்று உருவாகும் என சஜின் வாஸ்குணவர்தன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.