Header Ads



கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கின்றது - WHO

கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

ஜெனீவாவில் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெ;டிரோஸ் அடெனெம் கெப்ரெயேசஸ் 

முதல் நோயாளி குறித்த அறிவிப்பிற்கும் 100,000 நோயாளிகள் குறித்த அறிவிப்பிற்கும் இடையில் 67 நாட்கள் காணப்பட்டன என தெரிவித்துள்ளார்.

எனினும் அடுத்த 11 நாட்களில் மேலும்100,000 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் இறுதியாக நான்கு நாட்களில் 100,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தற்போது சுமார் 300,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், உலகின் அனைத்து நாடுகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் இனம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.