Header Ads



காவிக் கொடி ஏற்றப்பட்ட, பள்ளிவாசலில் தொழுகை ஆரம்பம்

-Abdul Azeez-

உலக மக்களின் இதயங்களை பதறவைத்த, காலிகள் காவிக் கொடி ஏற்றிய தில்லி அசோக் நகர் டி பிளாக் பகுதியில் உள்ள மௌலா பக்ஸ் பள்ளிவாசல்.

ரத்த நாளங்களில் கொதிப்பேற்றும் காட்சிகள் பள்ளிவாசல் முழுக்க நிறைந்து காணப்படுகின்றன. குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள இரண்டு மாடி பள்ளிவாசல் முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

ஏராளமான குர்ஆனின் பிரதிகள் தீக்கிரையாகி. . . .
பள்ளிவாசல் தலைவர் பெரியவர் ஆரிப் சொல்லும்போதே கண் கலங்குகிறார்.

25 முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே வசிக்கிற இந்த பகுதியில் கடைகள் வணிக நிறுவனங்கள் அதிகமாக இருப்பதால் பெரிதாக பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது.

பள்ளிவாசல்களுக்கு கீழே இருந்த கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு சூறையாடப்பட்டிருக்கின்றன. பள்ளி வாசலுக்கு எதிரே இருந்த மூன்று அடுக்கு மாடி வீடு ஒன்று முற்றிலுமாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சுமார் 25 முஸ்லிம் குடும்பங்களே உள்ள இப்பகுதியில் ஆயிரம் பேர் பள்ளிவாசலை சூழ்ந்து கொண்டதாகவும் அப்போது அவர்களை தடுக்க முயற்சி செய்த உள்ளூர் பகுதி மாற்றுமத சகோதரர்களை கல்வீசி அவர்கள் தடுத்து விட்டதாகவும் பள்ளிவாசலின் தலைவர் கூறினார்

இந்தப் பகுதியில் ஐந்து வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு சூறையாடப் பட்டுள்ளன். அல்லாஹ்வின் கிருபையால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்

கோவை கலவரத்தில் இந்து முன்னணியினர் பிரியாணி அண்டாவை திருடியது போல இந்த பள்ளிவாசலில் இருந்து 2500 லிட்டர் பிடிக்கக்கூடிய வாட்டர் டேங்கை ஒரு மினி லாரி கொண்டுவந்து கடத்திச் சென்றுள்ளனர். அத்தோடு பள்ளிவாசலில் உதவி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பைப்புகளையும் பிடுங்கி சென்றுள்ளனர்.

முஸ்தபாபாத், அசோக் நகர் பகுதிகளில் சுமார் 12 பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக இந்தப் பகுதியிலுள்ள சலீம் என்ற சகோதரர் கூறினார்

கருகிய வாசம் மூக்கை துளைக்கிற நிலையிலும் பள்ளிவாசலின் மொட்டைமாடியில் தொழுகையை ஆரம்பித்து விட்டனர்.

பள்ளிவாசலின் மூன்றாம் மாடி கட்டப்படாமல் இருக்கிறது இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் இந்த பள்ளிவாசல் முழுமையாக மிகச் சிறப்பாக கட்டப்பட்டு விடும் என்ற உத்தரவாதத்தை அவர்களுக்கு தெரிவித்து விடை பெற்று வந்தோம்.



2 comments:

  1. அல்லாஹ் அக்பர்

    ReplyDelete
  2. Ya Allah make this Masjid great again ! Aameen.

    ReplyDelete

Powered by Blogger.