Header Ads



பொதுஜன பெரமுனவில் டில்ஷானுக்கு இடம் இல்லையா?

இலங்கை பொதுஜன பெரமுனவின் காலி மாவட்டத்துக்கான வேட்பாளர் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரட்ன டில்ஷான் பெயர் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் பட்டியலில் காலியில் இருந்து போட்டியிடுவதாக டில்ஷான் முன்னர் அறிவித்திருந்தார்.

காலி மாவட்டத்திலிருந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று அவர் நம்பிக்கையுடன் கூறிய போதிலும், அவரின் பெயர் வேட்பு மனு பட்டியலில் இடம்பெறவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

அமைச்சர் ரமேஷ் பதிரண தலைமையில் காலி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை பொதுஜனபெரமுன இன்று வழங்கியது.

சில உள்ளூர் பொதுஜனபெரமுன அரசியல்வாதிகள் டில்ஷான், காலியில் இருந்து போட்டியிடும் முடிவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தமையே அவரது பெயர் இடம்பெறாமைக்கு காரணமென தெரிவிக்க்படுகிறது.

1 comment:

  1. GOOD LESSON FOR THIS GUY.HE IS BY BIRTH A MALAY MUSLIM.HE GOT HOLD OF HIS MOTHER WHO IS A SINGALEASE AND USED HER MAIDEN NAME THILAKARATNE TO GET A PLACE TO PLAY FOR SRILANKA.SEE WHAT IS THE RESULT NOW.EVEN IF YOU CHANGE YOUR NAME THE BUDIST IN LANAKA WILL NEVER ACCEPT YOU.

    ReplyDelete

Powered by Blogger.