Header Ads



வடகிழக்கில் முஸ்லிம் குடியிருப்புக்களை ஒன்றினைந்து, ஒரு தென்கிழக்கு அலகினை பெற்றுக் கொள்ள வேண்டும் - பேராசிரியர் பத்மநாதன்

அஸ்ரப். ஏ. சமத்

கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் தமிழா்களோடு அந்நியோன்னிய வாழ்ந்த வரலாறு உள்ளது. எதிா்காலத்தில் தமிழ் பேசும் சமுகம் நமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமானல் தமிழ் முஸ்லிம் தலைவா்கள் இணைந்து பேசி வடகிழக்கில்  முஸ்லிம் குடியிருப்புக்களை ஒன்றினைந்து ஒரு தென்கிழக்கு அலகினை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எதிா்காலத்தில் நமது இருப்புக்கள் அடையாளங்கள் புவியல் மொழி, பொருளாதார ரீதியில் கேள்விக்குரியாகி விடும்.   .

கிழக்கில் வடக்கு மட்டுமல்ல பொலநருவை  அநுராதபுரத்தில் கூட சம்மாந்துரை வரலாற்று நுால் போன்று இதுவரை எழுதப்படவில்லை ஆனால்  தென்கிழக்கு பல்கலைக்கழக  பேராசிரியா்  ரமீஸ் அப்துல்லா தலைமையிலான   மற்றும் அவா் புததக குழு  பலா் ஒன்று சோ்ந்து பிரித்த்தாணியா் தொட்டு இன்று வரை இந்த நுால் தொகுக்கப்பட்டுள்ளது.  இது வரவேற்கத்தக்கது.   பேராசிரியா் பத்மநாதன் உரையாற்றினாா் 

மேற்கண்டவாறு அவா் சம்மாந்துறை வரலாறு நுால் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

1 comment:

  1. பேராசிரியர் பத்மநாதனின் முஸ்லிம் அலகுகள் பற்றிய கருத்தை நானும் 1980பதுகளில் இருந்தே வலியுறுத்தி வருகிறேன். இலங்கையில் அரசியல் ரீதியாக இலகுவாக சாத்தியமாக்கக்கூடிய பிரேணையாக இதனை வளர்த்தெடுப்பது இலகுவல்ல.

    1950 பதுகளின் வடக்கிழக்கு இணைப்பின் நிபந்தனையாக வடகிழக்கில் தமிழ் முஸ்லிம்களின் சமத்துவத்தையும் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கான மாவட்ட சபை அமைப்பக்படவேணும் என செல்வநாயகம் குரல் கொடுத்தார். செல்வநாயகத்தின் கருத்து தோழர் அஸ்ரப் அவர்களால் தென்கிழக்கு மாகாண சபையாக மீழமைக்கபட்டது. எல்லா சந்தர்பத்திலும் வடகிழக்கு தமிழர் கோரிக்கைக்கு சமாந்தரமாகவே முஸ்லிம் அலகுகள் கோரிக்கையும் வைக்கபட்டுள்ளது என்பது தமிழ் முஸ்லிம் மக்களிடையே புரிந்துணர்வு இல்லா விட்டால் இனப்பிரச்சினைக்கு சமாதான தீர்வு இல்லை என்பதையே சுட்டிக் காட்டுகிகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.