Header Ads



ஐரோப்பாவில் டாய்லெட் பேப்பருக்கு பற்றாக்குறை - சண்டையிடும் மக்கள், வீதியில் கொள்ளை


லண்டனில் டாய்லெட் பேப்பரை கடையில் வாங்கி சென்ற நபரை அடித்து, அதை ஒருவர் திருடி கொண்டு ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பிரித்தானியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

இதனால் வீட்டுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை அதிகளவில் வாங்கி வைக்க விரும்புகிறார்கள்.

அதிலும் முக்கியமாக கழிப்பறையில் பயன்படுத்தும் டாய்லெட் பேப்பருக்கு தேவை அதிகமாக உள்ளது.

அப்படி வடக்கு லண்டனில் உள்ள ஒரு கடையில் பொருட்களை வாங்க கூட்டம் அலைமோதியது. அங்கு சென்ற தினேந்திரா (56) என்பவர் இரண்டு டாய்லெட் பேப்பர் பண்டில்களை வாங்கினார்.

பின்னர் கையில் அதை வைத்து கொண்டு நடந்து சென்ற போது நபர் ஒருவர் அவரை அடித்து விட்டு ஒரு டாய்லெட் பேப்பர் பண்டலை திருடி சென்றுள்ளார்.

இது குறித்து தினேந்திரா கூறுகையில், என் பின்னால் வந்த நபர் திடீரென டாய்லெட் பேப்பர் பண்டிலை என்னிடம் இருந்து பிடிங்கி கொண்டு ஓடி விட்டார்.

நொடி பொழுதில் நடந்த இச்சம்பவத்தால் என் உடல் நடுங்கியதோடு, நான் அதிர்ச்சியடைந்து விட்டேன்.

இதே போல மிகவும் வயதானவர்கள் மற்றும் நோய் வாய்ப்பட்டவர்களுக்கு நடந்தால் எப்படி இருக்கும்? அதை நினைத்து நான் கவலை கொள்கிறேன் என கூறியுள்ளார்.

2 comments:

  1. Use Water instead of Paper your dirty Westerners....

    ReplyDelete
  2. They can solve the issue with natural water, which can clean them completely.. But the tissue can not do the job fully. They called they are developed nations but in this matter they are less than 3rd world countries, which uses water effectively.

    Turn to Water for cleansing yourself..no need to fight for tissue

    ReplyDelete

Powered by Blogger.