Header Ads



வைரசினால் பாதிக்கப்பட்ட நகரங்களை முடக்குவதற்கு, இராணுவத்தை அழைத்தது இத்தாலி


வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி நகரங்களை முடக்குவதற்காக இத்தாலி இராணுவத்தின் உதவியை நாடியுள்ளது.

வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவை விட அதிகரித்துள்ள நிலையிலயே இத்தாலி படையினரின் உதவியை நாடியுள்ளது.

இத்தாலியின் வடபகுதியில் பாரிய குழப்ப நிலை காணப்படுகின்றது, மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கையால் தடுமாறுகின்றன, இறந்தவர்கைள புதைப்பது கூட சாத்தியமற்றதாகியுள்ளது.

இத்தாலிக்கு ஆலோசனை வழங்கிவரும் சீன நிபுணர்கள் இத்தாலி விதித்துள்ள கட்டுப்பாடுகள் போதாது என குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே இத்தாலியின் வைரஸினால் பாதிக்கப்பட்ட நகரங்களை முடக்கும் நடவடிக்கைக்காக படையினரை பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இராணுவத்தை பயன்படுத்துவதற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன,114 படையினர் லொம்பாடியில் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் இது தாமதமான நடவடிக்கை ஆனால் அவசியமானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.