Header Ads



உலகின் கடைசி பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி அதன் குட்டியுடன் வேட்டையாடப்பட்டது


உலகின் கடைசி பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி அதன் குட்டியுடன் கென்யா நாட்டில் வேட்டையாடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கென்யா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மட்டுமே உலகின் அரிய வகை விலங்கினமான மூன்று வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் இருந்தன. அதனை கடந்த 2017ம் ஆண்டு வைல்ட் லைஃப் புகைப்படக்காரர் ஒருவர் படமெடுத்ததால் அது குறித்து தகவல் உலகெங்கும் பரவத் தொடங்கியது.

அதனையடுத்து, வெள்ளை ஒட்டகச் சிவிங்கிகளைக் காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கென்யாவில் உள்ள வனவிலங்கு சரணாலயத்திற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

Leucism என்ற மரபணு மாற்றத்தாலேயே இவ்வகை ஒட்டகச்சிவிங்கிகள் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன எனவும் வனவிலங்கு ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் பொருட்டு, இவ்வகை விலங்குகள் மீது மரபணு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன.

கரிஸா எனும் வனப்பகுதியில் இவ்வகை வெள்ளை பெண் ஒட்டகச்சிவிங்கியும், அதன் 2 குட்டி ஆண் ஒட்டகச்சிவிங்கிகளும் வசித்து வந்தன. இந்நிலையில், இந்த ஒட்டகச்சிவிங்கிகள் அண்மையில் வேட்டைக்காரர்களால் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றன.

மேலும், ஒரே ஒரு ஆண் ஒட்டகச் சிவிங்கி மட்டும் தற்போது உயிருடன் உள்ளதாகவும் கென்யா வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு உறுதி செய்துள்ளது.

அதன் எலும்புக்கூடுகள் தற்போது கரிஸா வனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளதாக கென்யா வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. வன உயிரினங்களை வேட்டையாடியவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என வனத்துறை தெரிவித்துள்ளது.

அரியவகை ஒட்டகச்சிவிங்கி வேட்டையாடப்பட்ட செய்தி இணையத்தில் பரவி, இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இனியாவது, வன உயிரினங்கள் வேட்டையாடப்படாமல் பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.




No comments

Powered by Blogger.