Header Ads



கொரோனா குணப்படுத்தக் கூடியதே என, இலங்கை டாக்டர்கள் நிரூபித்துள்ளனர்: -சீனா புகழாராம்

(நா.தனுஜா)

இலங்கையின் மருத்துவர்கள் குழாம் தமது துறைசார் நிபுணத்துவத் திறனைக் காண்பித்திருப்பதுடன் கொரோனா வைரஸ் தொற்று குணப்படுத்தக் கூடியது என்பதையும் நிரூபித்திருக்கிறார்கள் என்று சீனா பாராட்டுத் தெரிவித்திருக்கிறது.

இலங்கையில் முதலாவதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகக் கண்டறியப்பட்ட சுற்றுலாப்பயண வழிகாட்டி முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியதாக வெளியான செய்தியை மேற்கோள்காட்டி இலங்கையிலுள்ள சீனத்ததூதரகம் பாராட்டுத் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து சீனத் தூதரகம் மேலும் கூறியிருப்பதாவது: இலங்கையின் சுகாதார மருத்துவர்கள் குழாம் தமது துறைசார் நிபுணத்துவத் திறனைக் காண்பித்திருப்பதுடன் கொரோனா வைரஸ் தொற்று குணப்படுத்தக் கூடியதே என்பதையும் நிரூபித்திருக்கிறார்கள்.

அந்த வகையில் மருத்துவக் குழாமுக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவிக்கும் அதேவேளை, குணமடைந்த சுற்றுலாப் பயண வழிகாட்டிக்கும் வாழ்த்துக்களைக் கூறுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.