Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள் ஓரணியாகப் போட்டியிட்டு, பேரம்பேசும் சக்தியாக உருவாக முன்வர வேண்டும்

 முஸ்லிம் அரசியல்வாதிகள் பாராளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து ஓரணியாகப் போட்டியிட்டு 'பேரம்' பேசும் சக்தியாக உருவாக முன்வர  வேண்டும் என,  தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும்,  முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான  அஸாத்சாலி, விசேட ஊடக அறிக்கை ஊடாக  அழைப்பு  விடுத்துள்ளார்.
   அந்த அறிக்கையில்  அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 
   முஸ்லிம் அரசியல் தலைமைகள் எதிர்வரும் பாராளுமன்றத்  தேர்தலில் ஒன்றிணைந்து ஓரணியாகப் போட்டியிட வேண்டும். அதன்மூலம், நாட்டின் 'பேரம்' பேசும் சக்தியாக மாற வேண்டும்.
   பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் வேட்பு மனுத் தாக்கலுக்குத் தயாராகி வருகிறது. இச்சந்தர்ப்பத்தில், சகல முஸ்லிம் கட்சிகளும்  வாக்குகளைப் பிரிப்பதை விடுத்து ஒன்றிணைந்து செயற்படுவது, காலத்தின் கட்டாயத்தேவையும் அவசியமுமாகும். இது தொடர்பில்,  தேசிய ஐக்கிய முன்னணி இதற்கான முன்மொழிவை அனைத்துக் கட்சிகளிடமும் தெரிவித்துள்ள போதிலும்,  சாதகமான பதில் எதுவும் இதுவரையிலும்  கிடைக்கவில்லை.
   பொதுஜன பெரமுனவுக்கு மூன்றிலிரண்டு தனிப்பெரும்பான்மையை எடுப்பதற்கு எவ்வகையிலும்  சாத்தியமில்லை.  எனவே, இத்தருணத்திலாவது முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்தால் மாத்திரமே பலமான ஒரு பேரம் பேசும் சக்தியாக உருவெடுக்க முடியும். 

( ஐ. ஏ. காதிர் கான் )

1 comment:

  1. தேவையற்ற பேச்சுக்களைப் பேசி முஸ்லிம் சமூகத்தை பிழையாக வழிநடத்த எவரும் அவரகள் தலைவர்களாக இருந்தாலும் முயற்சி செய்யக்கூடாது. அப்படி ஏதாவது முயற்சி இருந்தாலும் அவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கடந்த ஒன்று இரண்டு அல்ல இருபது வருடங்களாக பேரம் பேசுதல் பேரம பேசுதல் என்று மக்களைச் சூடாக்குவதும் பலனை சம்பந்தப்பட்ட ஒன்றிரண்டு பேர் அனுபவித்துக்கொண்டு போவதும் நடக்காத புதினமும் இல்லை. காணாத காட்சியும் இல்லை. அதனால் மக்களுக்கு கிடைத்ததும் ஒன்றுமில்லை. அவரவரகளுக்கு தேவையான விதத்தில் இராஜதந்திரஙகளைப் பயன்படுத்தி தேவையான விதத்தில் அணிசேர்த்து தஙகள் அரசியல் இலாபங்களை நடத்தப்பாருங்கள். இருக்கும் பிரதிநிதித்துவமோ மிகவும் சொற்பம் தலைவரகளோ ரொம்ப ரொம்ப அதிகம். யார் MP ஆவது. அவரகளுக்கு யார் குடை பிடிப்பது.

    ReplyDelete

Powered by Blogger.