Header Ads



ஈஸ்டர் தாக்குதலில் 3 பிள்ளைகளை இழந்த தம்பதிக்கு, இன்று இரட்டைப் குழந்தைகள் பிறந்தன - உறவினர்களும் ஊரவர்களும் மகிழ்ச்சி


இலங்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் 3 பிள்ளைகளை இழந்த தம்பதியினருக்கு இன்று -13- இரட்டைப் பிள்ளைகள் பிறந்தனர்.

இலங்கையின் உயிர்த்த ஞாயிறு தின வெடிகுண்டு தாக்குதலில் மூன்று  குழந்தைகளை இழந்த ஸ்கொட்லாந்தின் மிகப்பெரிய தனியார் நில உரிமையாளரும் அவரது மனைவியும் ஒரு வருட காலத்திற்குள் புதிதாக பிறந்த இரட்டை சிறுமிகளின் பிறப்பைக் கொண்டாடுகின்றனர்.

கோடீஸ்வரர் அண்டர்ஸ் ஹோல்ச் போவ்ல்சென் மற்றும் அவரது மனைவி ஆன் இன்று டென்மார்க்கில் பிறந்த தமது குழந்தைகளை “இரண்டு சிறிய அற்புதங்கள்” என்று வர்ணித்தனர்.

“ஆன் மற்றும் ஆண்டர்ஸ் ஹோல்ச் பொவ்ல்சன் ஆரோக்கியமான இரண்டு சிறுமிகளின் பெற்றோரானார்கள். சுகப்பிரசவம் நடந்தது. குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளனர்..” என்று அண்டர்ஸின் செயலாளர் கூறினார்.

“குடும்பத்தினர் இந்த இரண்டு சிறிய அற்புதங்களையும் முழு மனதுடன் வாழ்த்துகிறார்கள். புதிய குழந்தை சிறுமிகளைப் பற்றி அறிந்து கொள்வதிலும், அவர்களை தமது வாழ்க்கையை உறுதிப்படுத்தும் பகுதியாக வரவேற்பதிலும் அண்டர்ஸ் தம்பதியினர் மகிழ்ச்சியடைகிறார்கள். ” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த குழந்தைகளின் பிறப்பு உறவினர்கள் மற்றும் ஊரவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2 comments:

  1. "நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!"
    (அல்குர்ஆன் : 2:155)

    ReplyDelete
  2. "நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!"
    (அல்குர்ஆன் : 2:155)

    ReplyDelete

Powered by Blogger.