Header Ads



11 நாடுகளை சேர்ந்தவர்கள், இலங்கைக்கு வருவதற்குத் தடை - விபரம் உள்ளே

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு பயணிகளை அழைத்து வருவதை தவிர்க்குமாறு அனைத்து விமான சேவை நிறுவனங்களுக்கும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது. 

அதன்படி, நாளை (14) முதல் மறுஅறிவித்தல் வரை இதனை செயற்படுத்துமாறு அனைத்து விமான சேவை நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இலங்கை சுகாதார அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் ஆஸ்திரியாவில் இருந்து இலங்கைக்கு பயணிகளை அழைத்து வருவதை மார்ச் 15 ஆம் திகதி முதல் தவிர்க்குமாறும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது. 

குறித்த 8 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்குமான தடை இரண்டு வாரங்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை மேலும் அறிவித்துள்ளது.

7 comments:

  1. China should be in front line? why?

    ReplyDelete
  2. @ Amir lebbe & Co
    It seems indirectly Sri Lanka has become a part of China already.  But it should not be a part(ner) in Corona virus!

    ReplyDelete
  3. Why China wasn’t blocked? China should be blocked immediately.

    ReplyDelete
  4. முதலில் தடைவிதிக்க வேண்டியது சீனாவுக்கு

    ReplyDelete
  5. what Sri lanka is going to archive from this ban without China?.

    ReplyDelete

Powered by Blogger.