Header Ads



'அன்னம்' சின்னத்தை பயன்படுத்தும் எந்த கட்சியினதும் தலைவராக ரவியே இருப்பார்

தேர்தல் ஒன்றில் 'அன்னம்' சின்னத்தை பயன்படுத்தும் எந்த கட்சியினதும் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவே இருப்பார் என தேர்தல்கள் ஆணைக்குழு ஐக்கிய தேசியக் கட்சியிடம் அறிவித்துள்ளது.

அன்னம் சின்னம் ரவி கருணாநாயக்கவின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனால் எந்தக்கட்சி அந்த சின்னத்தை பயன்படுத்துகிறதோ அந்தக்கட்சியின் தலைவராக ரவி கருணாநாயக்க இருப்பார் என தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.

புதிய ஜனநாயன முன்னணியின் சின்னமாகவே அன்னம் இருந்து வருகிறது.

இதன் தலைவராக ரவி கருணாநாயக்கவும், செயலாளராக சர்மிளா பெர்ணான்டோவும் பதிவாகியுள்ளனர்.

இந்த கட்சியின் கீழேயே 2010ஆம் ஆண்டு பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார்.

இந்த நிலையில் சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக கொண்ட ஐக்கிய தேசிய சக்தி பொதுத்தேர்தலில் அன்னம் சின்னத்தை பயன்படுத்த முடியுமா என்று தேர்தல்கள் ஆணையகத்திடம் ஐக்கிய தேசியக்கட்சி நேற்று வினவியிருந்தது.

ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவும் இதற்கு நேற்று ஒப்புதல் வழங்கியது. முன்னதாக சஜித் தரப்பு இதயம் சின்னத்தில் போட்டியிட விரும்பிய போதும் ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அதற்கு உடன்படவில்லை.

No comments

Powered by Blogger.