Header Ads



சிறைச்சாலைக்கு சென்று ரஞ்சனை, நலம் விசாரித்த ரணில்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்திப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

ரணிலுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ருவன் விஜேவர்தன, எரான் விக்கிரமரட்ண, அர்ஜுன ரணதுங்க ஆகியோரும் அங்கு சென்றிருந்தனர்.

மிகுந்த பாதுகாப்புடன் வெலிக்கடை சிறையின் பி அறையில் வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க கடந்த ஜனவரி 14ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து சட்டத்தரணி மட்டுமே அவரை சந்திக்க சிறைக்கு விஜயம் செய்த போதிலும் அரசியல்வாதிகள் எவரும் அங்கு செல்லவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ரணில் உள்ளிட்ட குழுவினர் சிறைச்சாலைக்கு சென்று ரஞ்சனை நலன் விசாரித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.