Header Ads



தங்கத்தின் விலை, பாரியளவு அதிகரித்தது

 உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா எனப்படும் கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய வார இறுதியில் தங்கம் ஒரு அவுன்ஸின விலை 1589 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

வைரஸ் தொற்று மேலும் நீடித்தால் தங்கத்தின் விலை 1600 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கும் என உலக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் மாத்திரமின்றி பெல்லேடியம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி போன்ற பிற விலைமதிப்புள்ள உலோகங்களின் விலையும் பாரியளவு அதிகரித்துள்ளது.

வெள்ளை தங்கத்திற்கு மாற்று பொருளான பெல்லேடியம் ஒரு அவுன்ஸின் விலை நூற்றுக்கு 4 வீதம் அதிகரித்துள்ளது. அதன் விலை 2417 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

No comments

Powered by Blogger.