Header Ads



உலகிலேயே அதிக போர்க்குற்றங்களைப் புரிந்த அமெரிக்கா, இலங்கை மீது குற்றஞ்சுமத்த முடியாது

(எம்.மனோசித்ரா)

உலகிலேயே அதிகளவு போர்க்குற்றங்களைப் புரிந்திருக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கு இலங்கை மீது குற்றஞ்சுமத்த முடியாது. அத்தோடு எந்த நீதிமன்றத்தில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் நீரூபிக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்காவிடம் கேள்வியெழுப்புவதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். 

விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பை முற்றாக ஒழிக்கும் யுத்தத்தில் முன்னின்று செயற்பட்டமையையே யுத்தக் குற்றம் என்று அமெரிக்கா கூறுகின்றது. எவ்வாறிருப்பினும் தனக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்கப்பட்டுள்ளமையால் எந்த நஷ்டமும் இல்லை என்று இராணுவத்தளபதி கூறியிருக்கின்றமை அமெரிக்காவுக்கு சிறந்தவொரு பதிலாக இருக்கும் என்றும் உதய கம்மன்பில மேலும் கூறினார். 

பத்தரமுல்லையில் உள்ள  பிவிதுரு ஹெல உறுமய தலைமை அலுவலகத்தில் இன்று 17 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

2 comments:

  1. அமெரிக்காவின் கண்காணிப்பு காரணமாகத்தான் பலநாடுகளில் மனித உரிமைகள் மேன்மை அடைந்து வருகிறது. எனவே உலகமக்கள் அமெரிக்கா விற்கு நன்றி சொல்ல வேண்டும்

    ReplyDelete
  2. அடேய் பேயா உனது கோழி மூளையை கொஞ்சம் மூடி வை

    ReplyDelete

Powered by Blogger.