Header Ads



ஸ்ரீ லங்காவிற்கு முதலிடம் என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு கூட்டணி செயற்படும்

(இராஜதுரை ஹஷான்)

 பொதுத்தேர்தலை இலக்காகக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி  கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் மார்ச் மாதம் 02ம் திகதி    கைச்சாத்திடப்படும். ஸ்ரீ லங்காவிற்கு முதலிடம் என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு கூட்டணி  செயற்படும்.

சின்னம் தொடர்பான இறுதி தீர்வு விரைவில் அறிவிக்கப்படும்.என  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று 26 இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்திற்குள் அரசாங்கம்  இன்று செயற்படுகின்றது. நாகரிகமான அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துவதாக  குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று  உரிமைக்காக போராடும் மக்கள் மத்தியில் எவ்வாறான நாகரிகத்தை  பின்பற்றுகின்றது என்பதை காணக்கூடியதாக உள்ளது.

எவ்வாறான கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தின் இரு தலைவர்களும் அரச நிர்வாகத்தை முன்னெடுத்து   செல்கின்றார்கள் என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ள  விடயம்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி ஜனநாயகத்த்திற்கு மாத்திரம் முன்னுரிமை கொடுக்கும். தேசய பொருளாதாரம், தேசிய  பாதுகாப்பு மற்றும்,தேசிய நல்லிணக்கம் இந்த மூன்று பிரதான அம்சங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புக் கொண்டுள்ளன.   ஒன்றிற்கு மாத்திரம் முக்கியத்துவம்  கொடுத்து பிறிதொன்றை துறக்க முடியாது. ஆனால் இன்று இந்த மூன்று அம்சங்களும் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளன என அவர் இதன்போது தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.