Header Ads



சாய்ந்தமருதிற்கான நகரசபையும், இப்பிரதேச அரசியல் எதிர்காலமும்

- முகம்மது நயீம் ஆதம்பாவா -

சாய்ந்தமருதிற்கான நகரசபை பிரகடனம்: இது அரச வர்த்தமானி இல: 2162 / 50 -2020 மூலம் பிரகடப்படுத்தப்பட்டுள்ளது, இது நீண்டகாலமாக நகரசபை கேட்டுப்போராடிவந்த சாய்ந்தமருது மக்களுக்கு மாத்திரமன்றி இதர்க்கு உறுதுணையாயிருந்த முழுக்கல்முனைத் தொகுதிமக்களுக்குமான வெற்றியாகும்.  இது பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டுவந்திருக்கின்ற கோரிக்கையாயினும் இப்பிரச்சினையினை முழுமையாக மக்கள்மயப்படுத்தி நகரசபையைப்பெற முன்னின்றுழைத்த முன்னாள் அதிபரும் பள்ளிவாயில் தலைவருமான அல்ஹாஜ் வை.எம். ஹனிபா தலைமையிலான குழுவினர் பாராட்டிடப்படவேண்டியவர்களே, ஏன் பாராட்டப்படவேண்டுமென்றால் இதனைச்சாதிக்க இவர்கள் பல திருகுதாள அரசியல் விளையாட்டுக்களுடன் அவர்களது பாணியியிலேயே விளையாடி வெற்றிகண்டிருக்கின்றனர், ஏன் இதனைக் குறிப்பிடவேண்டுமென்றால் இவ்வளவு காலமும் ஜனநாயக மற்றும் நேர்மையான வழிகளில் போராடியவேளைகளிலெல்லாம் இம்மக்களுக்கு கிடைத்தது பொய் வாக்குறுதிகளும் ஏமாற்றங்களுமே. 

இப்பிரச்சினையில் கிடைத்த அனுபவம்: இதன்மூலம் நாங்கள் பல பாடங்களை கற்க வேண்டியுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் உருவாக்கக்கூடிய பிரச்சினைகளையும் இதனைப்பெறப்போராடிய குழுவினர் அடையாளம் காணவேண்டியுள்ளதுடன் அதனை சுமூகமகத்தீர்க்க வேண்டியவர்களாகவுமுள்ளனர்.  முதலாவது ஊர்வாதத்தினை முற்படுத்தி அரசியல் செய்வதன் ஆபத்தினையும் அதன் விளைவுகளையும் நேரடியாகக்காணக்கிடைத்ததுடன் இதனைவைத்து அரசியல் செய்தவர்கள் தோல்விமூலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர், மற்றும் இவ்வூர்வாதத்தினை முன்வைத்து எதிர்காலத்தில் அரசியல் நடாத்த முனைபவர்களும் எப்பிரதேசத்தவராயினும் நிச்சயம் எல்லோரதும் சாபத்திற்கு ஆளாவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இரண்டாவதாக, இச்சபை மூலம் தாங்கள் சபைக்கேட்டுப்போராடிய காலங்களில் ஏற்பட்ட உறவு இடைவெளிகளை உயர்மட்ட சந்திப்புகள் மற்றும் தெளிவுபடுத்தல்களூடாக நிபர்த்திசெய்யவேண்டிய பொறுப்பும் இச்சபையினை வென்றெடுத்த குழுவினர்களுக்குரியதாகும். இதற்காக சகஊர் பள்ளிவாயில் நிர்வாகிகள் சகோதர இனத்தலைவர்கள் போன்றவர்களுக்கு புரிந்துணர்வுரீதியாக கருத்துப்பரிமாறல்களை செய்வதும் ஒரு முக்கிய பணியாகும்.
மூன்றாவதாக, இப்பிரச்சினையினை இவ்வளவுதூரத்திற்கு வளர இடம்கொடுத்த முஸ்லிம்காங்கிரஸ் மற்றும் ஏனைய முஸ்லீம் தலைமைகள் இதிலிருந்தாவது தேவையான அனுபவங்களைப்பெற்று எதிர்காலத்தில் சமூக ஒற்றுமையினைக்குலைத்து அரசியல் இலாபமீட்டுவதிலிருந்து தவிர்த்து இவ்வாறான பிரச்சினைகளில் ஒருபக்கச்சார்பாக நில்லாது தூரதிருஷ்டியுடன் தலைமைத்துவத்திற்குரிய ஆளுமையுடன் தீர்வுகளை உறுதிப்படுத்த வேண்டும். 

நான்காவது, இச்சபையினைப் பெற்றமக்கள் இந்நகரசபை மூலம் தாங்கள் வேண்டிநின்ற தங்களுக்கான அரசியல் தனித்துவம், பிரதேச சமூக சூழல் ரீதியான அவிபிருத்தி மற்றும் அதற்க்கான பொறிமுறையினை வகுத்தலென ஒரு இடைக்காலச்சபைமூலம் இச்செயல்பாடுகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். இச்சபைமூலம் ஒருசில அரசியல்வாதிகளும் கொந்தராத்துக்காரர்களும் மாத்திரம் பயனடையாது முழுச்சமூகமும் பயனடைய உறுதிப்படுத்துவது இச்சபைக்காகப்போராடிய ஒவ்வொரு குடிமகனதும் தலையாயகடமையாகும். இந்நகரசபை பெறப்பட்டதன் மூலம் இப்பிரதேச மக்கள் என்ன நன்மைகளைப் இனிவரும்காலங்களில் பெறப்போகின்றார்களென்பது இந்நகரசயின் செயல்பாடுகளை ஆகக்குறைந்தது ஒவ்வொரு வருடமுடிவிலும் மதிப்பீடுக்குட்படுத்துவதன்மூலம் இதன் பயனாளிகளின் உண்மைநிலைமையினையறிந்துகொள்ள முடியும். 

இறுதியாக, இது இன்றோ நாளையோ ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய ஒருநிகழ்வாகும், ஏனெனில் சனத்தொகை அதிகரிக்க தேவைகள் அதிகரிப்பதும் பல புதிய நிர்வாக அலகுகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் உருவாவதும் இயற்கயே அதற்கேற்றவாறு நிர்வாகம் பன்முகப்படுத்தப்படுவது  தவிர்க்கமுடியாதது, இது யாருக்கும் எதிரானதாக யாரும் கருதக்கூடாது, சகோதர சமூகக் கோரிக்கையாயினும் இவ்வாறே பார்க்கப்படவேண்டும், நாங்கள் எல்லோருமே ஒரே இறைவனால் படைக்கப்பட்ட சமய சமூகக்கருத்து வேறுபாடுள்ள சமூகங்களாகும்.

அரசியல் அதிகாரம்: இந்நகரசபைப்போராட்டம் எமக்கு ஒன்றினை அழுத்திக்கூறுகின்றது, அதுதான் அரசியல் அதிகாரம், இதன்மூலம் இவ்வளவுநாளும் பிரதம மந்திரி, முஸ்லீம் அரசியல் தலைவர்கள் போன்றவர்களால் கொடுக்கமுடியாதுபோன நகரசபை மக்களின் ஐக்கியப்பட்ட எழிச்சி மூலமாக புதிய அரசியலதிகாரத்தினூடாகக் கிடைக்கப்பெற்றுள்ளது, எனவே அரசியலதிகாரத்தின்மூலம் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கப்பால் சென்று ஒரு தனிமனித அடக்குமுறையையும் செயல்படுத்தலாம் மாறாக மக்கள் விருப்பத்திட்கிணங்க ஒரு அடக்குமுறையிலிருந்து விடிவினையுமேற்படுத்தலாமென்பது உணர்த்தப்பட்டுள்ளது. 

சமூக ஒற்றுமையை முற்ப்படுத்தி உருவாக்கப்பட்ட முஸ்லீம் காங்கிரஸ் இவ்வாறான பிரச்சினைகளில் குறிப்பிட்டசிலரின் கைதியாகியிருப்பதனால் இப்பிரதேச மக்களிடம் இக்கட்சி என்ன நியாயம் சொல்லப்போகின்றதென்பதனைப் பொறுத்தே இனிவரும் தேர்தல்களில் இவர்களுக்கான ஆதரவினைக்கணிக்கலாம், எவ்வாறாயினும் உடனடியாக இம்மக்கள் நகரசபை பெற்றுக்கொடுத்தவர்களை கைகழுவி தங்களுக்கு சபைதரத் தடையாயிருந்தவர்களுக்கு வாக்களிக்கப்பார்களெனகூறமுடியாது. ஏனெனில் முஸ்லீம் காங்கிரஸ் தங்களைக் கைவிட்டுவிட்டதாகவும் அது சில தனிநபர்சொத்தென உணரத்தலைப்பட்டுவிட்டார்கள்.   
    
எனவே, இனிவரும் காலங்களில் இவ்வதிகாரத்தினை நேர்மையானவர்களின் கைகளில் கொடுப்பதன்மூலம் தங்கள் வாக்குரிமைக்கான பெறுமதியினை தக்கவைத்துக்கொள்ளமுடியும், எனினும் அவ்வாறானவர்கள் எக்கட்சியில் வந்தால் எமது சமூக உரிமைகாக போராடுவார்கள் என்று சிந்தித்து வாக்களிப்பதா அல்லது குறுகியகாலக் கோரிக்கையை முன்வைத்து எக்கட்ச்சியாயினும் அதற்கேற்றவாறு தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதா என்ற சிந்தனைப்போராட்டத்தில் இம்மக்கள் சிக்கித்தவிக்கின்ற நிலைமையினைக்காணலாம். எவ்வாறாயினும், இதற்கான தெளிவு தாங்கள் வாக்களிக்கக்கூடிய கட்சியின் தலைவர்களால் கொடுக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நம்பகத்தன்மைலேயே  இப்பிரதேச மக்களின் அரசியல் தீர்மானங்கள் அமையவாய்ப்புள்ளது.            

5 comments:

  1. ஒவ்வொரு ஊருக்கும் இப்படியான சுயேட்சைக் குழு அவசியம் என்று எண்ணத் தோன்றுகிறது.
    கட்சிகள், சின்னங்கள், தனிநபர் அந்தஸ்து என்பவற்றின் பின்னால் சென்று பிரிவினை அரசியல் செய்து கடைசியில் ஏமாற்றப்படுவதை விட சுயேட்சையாக ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக நின்று நமது கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதற்கு சாய்ந்தமருது மக்கள் சிறந்த எடுத்துக்காட்டு.
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. ondru pattal undu walwu otrumai endra kaitrai thani urukana suyanalathinal ilandhuwitteerhal.ini otrumai illadha samoohathil pirachinai waruwadhai poruthu irundhu parungal.piriwinaiwadhihal owworu urukkana poti poramai,uoor thuwesam,ego anaithum niraindhu kaanapaduhindradhu.thulluhiramadu podhi sumakkum oru naal. aanal ini kalmunai anadhayaha pohum anniya sakthiyin thakam seluthum.pirivinaiwadham sandaiwara kaaranamaha thani alahu keta saindhamarudhu muslim peyar thangiya yoodha kolhai udaya peyarthaniya iwarhalukay aahum.Muslim than Muslimukku edhuri endru nirufithuwitteerhal. Bani israyil samoohathukku wandha sodhanayai edhirparungal.

    ReplyDelete
  3. அனைத்துக் கல்முனை மக்களையும் வாழ்த்துவோம் வாருங்கள்
    .
    உருவாகும் சாய்ந்த மருது பிரதேச சபைக்கும் சாய்ந்த மருது மக்களுக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள். உறுதிப் படுத்தப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கும் கல்முனை வடக்கு மக்களுக்கும் எனது முன்கூட்டிய வாழ்த்துக்கள்.
    .
    இது எங்கள் பிள்ளைகளின் உலகம். அவர்களுக்காக அவர்களுக்காக கடந்தகாலக் கசப்புகளை மறந்து ஒற்றுமையின் கயிற்றை இறுகப் பற்றுவோம்.
    வாருங்கள். கல்முனைக்குடி சாய்ந்த மருது மற்றும் கல்முனை வடக்கு முஸ்லிம் தமிழ் மக்களை வாழ்த்தி அவர்கள் நல்லுறவும் சமாதான சகவாழ்வும் மேம்பட பிரார்த்திப்போம் வாருங்கள்,

    ReplyDelete
  4. ஆதம்பாவா,
    உங்களது எழுத்தின் நகர்வும் உள்ளடக்கமும் தமது உளவியலை படம்பிடித்துக் காட்டுகிறது. குத்துக்கரணங்களும் காட்டிக் கொடுப்புக்களும் அதற்கும் மேலே கூட்டிக் கொடுப்புக்களும் இடம்பெற்றும் சாதிக்க முடியாத்தை தனி மனிதனாக நின்று அதாவுள்ளா பெற்றுக் கொடுத்ததை எழுத தங்களின் கை மறுத்தது காழ்ப்புணர்வினதும் பிரதேச வாதத்தினதும் உச்சம் என்பதும் உள்ளம் சார்ந்தது தான்.
    இனி மேலாவது உள்ளதை உள்ளவாறு பேசுவோம்.

    ReplyDelete
  5. Why they didn’t mention Former minister and national congress leader athaullah name?
    Is it good??

    ReplyDelete

Powered by Blogger.