Header Ads



சிங்களவர்கள் பௌத்த சமயம் அவர்களுடையது, என நினைப்பதே பிரதான பிரச்சினையாகும்

இலங்கையில் தான் உட்பட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்து வருவதாக வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பௌத்தம் குறித்து பேசும் போது சிங்களவர்கள் பௌத்த சமயம் அவர்களுடையது என நினைப்பதே பிரதான பிரச்சினையாகும்.

புத்தர் சிங்களவர் அல்ல எனக் கூறினால் மாரடைப்பு ஏற்படக் கூடியவர்கள் இருக்கின்றனர். விஜயன் சிங்களவர் அல்ல எனக் கூறினால், எங்களுடன் சண்டைக்கு வருபவர்களும் இருக்கின்றனர்.

பௌத்தத்தை சிங்களவர்களின் சொத்தாக மாற்றிக்கொள்ளாமல், பௌத்தம் என்பது வடக்கு, தெற்கு கிழக்கு, மேற்கு என அனைவருக்கும் சொந்தமான உலக தர்மம், வாழ்க்கை முறை என மாற்ற சிங்களவர்கள் தலையிடும் நாளில் இதனை விட சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.

கடந்த ராஜபக்ச அரசாங்கம் வடக்கில் அபிவிருத்திகளை செய்தாலும் அரசியல் நெருக்கடியை தீர்க்க காட்டிய அசமந்த போக்கு பாரதூரமான குறைப்பாடு.

வடக்கு மக்கள் ராஜபக்ச ஆட்சி நிராகரிப்பதற்கு தெளிவான காரணம் இருக்கின்றது. ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வடக்கில் வீதிகள் நிர்மாணிக்கப்பட்டன.

இலங்கையில் ஏனைய இடங்களைவிட அபிவிருத்திகள் நடந்தன. எனினும் முன்னர் இருந்த புண்ணுக்கு தீர்வு கிடைக்கவில்லை. தமிழ் மக்களின் அரசியல் சிந்தனையில் இருக்கும் காயம் அப்படியே இருக்கின்றது.

உண்மையில் அபிவிருத்தியை செய்யும் அதேவேளையில் அரசியல் தீர்வை வழங்கியிருக்க வேண்டும். எனினும் அது நடக்கவில்லை.

இது மிகவும் பாரதூரமான தவறுதல் என்றே நான் காண்கின்றேன். எவ்வாறாயினும் மைத்திரிபால சிறிசேன வடக்கிற்கு விசேடமாக வடக்கு மக்களுக்கு பாரிய சேவைகளை செய்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.