Header Ads



ஈஸ்டர் தற்கொலை தாக்குதல், தற்போதைய நிலவரம் யாது

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் பெண்களாவர். 216 பேரில் 153 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமைய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என சட்டம் மற்றும் ஒழுக்காற்று பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்­துடன், தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் 80 சத­வீதம் முழுமை பெற்­றுள்­ளன. குண்­டுத்­தாக்­கு­தலின் முக்­கிய சூத்­தி­ர­தா­ரிகள் வெகு­வி­ரைவில் சட்­டத்தின் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள் என்றும் அவர் சுட்­டிக்­கா­ட்டி­யுள்ளார்.

மேலும், இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தினால் ஈர்க்­கப்­பட்­டுள்ள அப்­பாவி இஸ்­லா­மிய இளை­ஞர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்த இந்­தி­யாவில் சிறப்பு பயிற்­சி­பெற்ற குழு­வி­னரால் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும். இலங்­கையில் இஸ்­லா­மிய மற்றும் ஏனைய மத அடிப்­ப­டை­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட வன்­மு­றைகள், தாக்­கு­தல்கள் எதிர்­கா­லத்தில் நிக­ழாமல் தடுப்­ப­தற்­கான திட்­டங்கள் வகுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரி­வித்தார்.

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயி­று­தின குண்­டுத்­தாக்­குதல் இடம்­பெற்று ஒரு வருடம் பூர்த்­தி­யா­க­வுள்ள நிலையில் நிறை­வு­பெற்ற 10 மாத காலத்தில் இலங்கை பொலிஸார், குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் முன்­னெ­டுத்த விசா­ரணை நட­வ­டிக்­கை­களின் முன்­னேற்­ற­த் ­தன்மை தொடர்பில் தெளி­வு­ப­டுத்தும் ஊடக சந்­திப்பு நேற்று பொலிஸ் தலைமை காரி­யா­ல­யத்தில் இடம்­பெற்­றது.

இந்த ஊடக சந்திப்பில் கலந்­து­கொண்டு தெளி­வு­ப­டுத்­து­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இந்த ஊடக சந்­திப்பில் பொலிஸ் ஊடக பணிப்­பாளர் ஜாலிய சேனா­ரத்ன, குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வெதா­ராச்சி ஆகியோரும் கலந்து கொண்­டனர்.

மிலேச்­சத்­த­ன­மான ஈஸ்டர் குண்­டுத்­தாக்­குதல் இடம்­பெற்று ஒரு வரு­ட­காலம் பூர்த்­தி­யா­க­வுள்­ளது. மூன்று வழி­பாட்டுத் தலங்­க­ளுக்கும், 3 நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளுக்கும், 2 இடங்­க­ளிலும் அடிப்­ப­டை­வா­திகள் தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளாக மாறி தாக்­கு­தல்­களை குறு­கிய நேரத்­திற்குள் நிகழ்த்­தி­யி­ருந்­தார்கள். இந்த தாக்­கு­த­லினால் 300இற்கும் அதி­க­மானோர் இறந்­த­துடன், 590இற்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­தனர்.

குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் குற்­றத்­த­டுப்பு பிரி­வினர், பொலிஸார் துரி­த­மான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தார்கள். இத­ன­டிப்­ப­­டையில் குண்­டுத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் 216 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 7 பேர் பெண்கள். 216 பேரில் 153 பேர் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் நீதி­மன்­றத்தின் தீர்­மா­னத்­திற்­க­மைய தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

குண்­டுத்­தாக்­குதல் தொடர்­பான ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கும், தொழி­நுட்ப வச­தி­களை விசா­ரணை நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­ப­டுத்­து­வ­தற்கும் சர்­வ­தேச பொலிஸார், ஐக்­கிய அரபு இராச்­சிய விசா­ரணைப் பிரிவு, அவுஸ்­தி­ரே­லி­யாவின் பெடரல் தொடர்பு, இலங்­கையின் தட­ய­வியல் துறைசார் நிபு­ணர்கள் உள்­ளிட்ட பல­த­ரப்பு துறைசார் நிபு­ணர்­களின் ஆத­ர­வுடன் விசா­ரணை நட­வ­டிக்கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

பயங்­க­ர­வாதி சஹ்­ரா­னுடன் நேரடி மற்றும் மறை­முகத் தெர்­டர்பைக் கொண்­டுள்­ள­தாக சந்­தே­கத்தின் பிர­காரம் சர்­வ­தேச பொலி­ஸாரின் உத­வி­யுடன் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­தி­லி­ருந்து 6 இலங்­கை­யர்கள் கைது செய்­யப்­பட்டு இலங்­கைக்கு நாடு கடத்­தப்­பட்­டுள்­ளார்கள். இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை போதிக்கும் விதத்தில் செயற்­பட்­டுள்­ளார்கள் என்ற அடிப்­ப­டையில் 4 மாலை­தீவுப் பிர­ஜைகள் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள். இவர்­களில் இரு­வரின் அடிப்­படை உறு­திப்­ப­டுத்தல் ஆவ­ணங்கள் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன், மிகுதி இருவர் தொடர்­பான விசா­ரணை நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

குண்­டுத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளி­னதும், சந்­தே­கத்­தின்­பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்­க­ளி­னதும் 3000ற்கும் அதி­க­மான தொலை­பேசி உரை­யா­டல்கள் பரி­சீ­லனை செய்­யப்­பட்­டுள்­ளன., இணையம் மூலம் மேற்­கொள்ளும் உரை­யா­டல்கள் தொடர்பில் ஆராய ஏ.எப்.பி. மற்றும் எப்.பி.ஐ. ஆகிய நிறு­வ­னங்­களின் உத­விகளும் பெற்றுக் கொள்­ளப்­பட்­டன.

குண்­டுத்­தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணை­க­ளின்­போது தனிப்­பட்ட சாட்­சியம், விஞ்­ஞான தொழி­நுட்ப சாட்­சியம் உள்­ளிட்ட விட­யங்­க­ளுக்கு அதிக கவனம் செலுத்­தப்­பட்­டன. வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கைப்­பற்­றப்­பட்ட வெடி­பொ­ருட்கள், மாவ­னெல்லை பிர­தே­சத்தில் புத்தர் சிலை உடைப்பு உள்­ளிட்ட இரு சம்­ப­வங்­களும் ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­கு­த­லுடன் நேர­டி­யாகத் தொடர்­பு­பட்­டுள்­ளன என்­பது இது­வ­ரை­யான விசா­ர­ணை­களின் ஊடாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

மாவ­னெல்லை புத்தர் சிலை உடைப்பு திட்­ட­மி­டப்­பட்ட வகையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சம்­ப­வ­மாகும். இந்த சம்­ப­வத்தில் தொடர்­பு­டை­ய­தாகக் கைது செய்­யப்­பட்ட 42 பேரில், 21 பேர் ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­கு­தலின் முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­யான பயங்­க­ர­வாதி சஹ்­ரா­னுடன் பல்­வேறு விட­யங்­க­ளுடன் தொடர்பு கொண்­டுள்­ளார்கள்.

தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளி­னதும் அவர்­களின் உற­வி­னர்­க­ளது உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு வங்கி கணக்­குகள், அசையும் மற்றும் அசையா சொத்­துக்கள் பரி­சீ­லிக்­கப்­பட்டு நீதி­மன்­றத்தின் அனு­ம­தி­யுடன் வங்­கிக்­க­ணக்­குகள் இடை நிறுத்தம் செய்­யப்­பட்­டுள்­ள­துடன், அசையா சொத்­துக்­களும் முடக்­கப்­பட்­டுள்­ளன.

குண்­டுத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற அடிப்­ப­டையில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்து ரி- 56 ரக துப்­பாக்கி 3, மைக்ரோ துப்­பாக்கி 1, ரிவோல்வர், 5,520,000 ரூபா பணம், 23,500 அமெ­ரிக்க டொலர்கள்,19 பவுண் தங்கம்,113 ஸ்மார்ட் கைய­டக்­கத்­தொ­லை­பேசிகள், 22 கணி­னிகள், 29 மடிக்­க­­ணினிகள், 01 ஐ-பேட், 02 மோட்டார் கார்கள், 01 முச்­சக்­கர வண்டி, 01 மோட்டார் சைக்கிள் உள்­ளிட்­டவை இது­வ­ரையில் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­களம் மற்றும் பயங்­க­ர­வாத ஒழிப்பு மற்றும் விசா­ரணை பிரி­வினர் 11 விசேட குழுக்­க­ளாகப் பிரிந்து பல்­வே­று­பட்ட விதத்தில் விசா­ரணை நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றார்கள். குண்­டுத்­தாக்­கு­த­ல் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபர்­க­ளுக்கு கொலை (தண்­டனை சட்­டக்­கோவை 294), கடுங்­காயம் (தண்­டனை சட்­டக்­கோவை 311), வெடி­பொ­ருட்­களை தன்­வசம் வைத்­தி­ருத்தல், ஆயு­தங்­களை தன்­வசம் வைத்­தி­ருத்தல் மற்றும் உப­யோ­கித்தல் தொடர்பில் சந்­தேக நபர்­க­ளிற்கு எதி­ராக 1916.33ஆம் இலக்க துப்­பாக்கி கட்­ட­ளைச்­சட்டம், 1956.21ஆம் இலக்க வெடி­பொ­ருட்கள் சட்டம், 1947.25ஆம் இலக்க பொது­மக்கள் பாது­காப்பு சட்டம், 2006.05ஆம் இலக்க பண மோசடி தடுப்­புச்­சட்டம், 1979.48ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடுப்பு தற்­கா­லிக விதி­மு­றைச்­சட்டம் ஆகி­ய­வற்றின் கீழ் நீதி­மன்ற நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.
ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­குதல் தொடர்பில் சுயா­தீன விசா­ரணை ஆணைக்­கு­ழுக்­களின் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதால் தெரிவு செய்­யப்­பட்ட தக­வல்­களை மாத்­தி­ரமே குறிப்­பிட முடியும். இத­ன­டிப்­ப­டையில் 80 சதவீதமான விசாரணை நடவடிக்கைகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன.

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தின்பால் பல அப்­பாவி முஸ்லிம் இளை­ஞர்கள் ஈர்க்­கப்­பட்­டுள்­ளார்கள். இவர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வது அர­சாங்­கத்­தி­னதும், பொலி­ஸா­ரி­னதும் கட­மை­யாகும். இதற்­கா­கவே பொலிஸ் அதி­காரி ஒருவர் இந்­தியா­விற்கு அனுப்­பப்பட்டு 03 மாத­கால பயிற்சி பெற்­றுள்ளார். அடிப்­ப­டை­வாத போத­னைகள் இடம்­பெ­று­வ­தாக அடை­யா­ளப்­படுத்தப்­பட்­டுள்ள பிர­தே­சங்­களில் பொலிஸார் விசேட பயிற்­சி­நெ­றி­களை முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்குவார்கள்.

நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் மாத்திரமல்ல, பிற மதங்களை அடிப்படையாகக் கொண்ட அடிப்படைவாத தாக்குதல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் பலமான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படும். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் பிரதான குற்றவாளி நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்றார்.-Vidivelli

No comments

Powered by Blogger.