Header Ads



மிக எளிமையாக தேசிய சுதந்திர தினம் - ஜனாதிபதி உத்தரவு, பல விடயங்கள் நீக்கம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கமைய இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை மிகவும் எளிமையாக கொண்டாட அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதற்கமைய இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களின் சில அம்சங்களை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதற்கு முன்னர் சுதந்திர தின கொண்டாட்டங்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. எனினும் இம்முறை இரண்டு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவில் ஜனாதிபதியின் வருகையின் போது குதிரைப்படை வீரர்கள் அவருக்கு முன்னால் பயணிப்பது ஒரு பொதுவான நடைமுறையாக இருந்தது. எனினும் இந்த ஆண்டு, குதிரைப்படையை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

பரசூட் உதவியுடன் முன்னெடுக்கப்படும் வான வேடிக்கை நிகழ்வுகளும் இம்முறை இடம்பெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின அணி வகுப்பில் சேர்க்கப்படும் இராணுவ வாகனங்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இராணுவத்தின் ரேடார் கட்டமைப்பு உட்பட பெரிய அளவிலான இராணுவ வாகனங்கள் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்டன. எனினும் இதுபோன்ற வாகனங்கள் இம்முறை அணிவகுப்புக்கு பயன்படுத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊனமுற்ற வீரர்கள் கடந்த காலங்களில் அணிவகுத்து வந்தாலும், இந்த முறை அணிவகுப்பில் சேர்க்க கூடாதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களில் சுமார் 2,500 விருந்தினர்கள் மாத்திரமே பங்கேற்பார்கள் என பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களில், தேசிய கீதம் பாடப்படும் மொழி தொடர்பில் கடந்த நாட்களாக பரபரப்பான விவாதங்கள் நடைபெற்றது.

கடந்தாண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் பாடப்பட்டது. எனினும் இம்முறை சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Photo வைக்க வேண்டாம் என்று சொன்னீங்க , பள்ளிக்குள்ள சீலை வைத்தாங்க. அங்கவீனர்கள் வேண்டாம் என்று சொன்னீங்க , அத்தூரிலியாவின் துவேஷம் அடங்கவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.