Header Ads



87 வயதுடைய சம்பந்தன், திருகோணமலையில் போட்டி - மாவை சேனாதிராஜா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் ஆலோசகருமான இரா.சம்பந்தன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவார் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

சம்பந்தன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள போதிலும் அவர் அப்படியான தீர்மானம் குறித்து கட்சிக்கு அறிவிக்கவில்லை.

சம்பந்தன் கடந்த பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சில வேலை அவர் போட்டியிடவில்லை என்றால், தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வது என அனைவரும் இணங்கியுள்ளனர்.

அதேவேளை கட்சியில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் பெண்களை தேர்தலில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் என இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. நல் வாழ்த்துக்கள் சம்பந்தன் ஐயா. இலங்கைதீவில் இன்றுள்ள நாகரிகமான தலைவர்களுள் முதன்மையானவர் நீங்கள். உங்கள் காலத்தில் இலங்கையில் இனப்பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும் என மனசு அவாவுகிறது. நீங்கள் இன்னும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.