Header Ads



ஐ.தே.கட்சி 50 இற்கும் குறைவான ஆசனங்களையே பெறும்: பொதுஜன பெரமுன

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி எந்த சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டாலும் நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு 50 இற்கும் குறைவான ஆசனங்களே கிடைக்கும் என ராஜாங்க அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று -27- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சின்னம் தொடர்பான பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இப்படியான பிரச்சினைக்கு மத்தியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எப்படி போட்டியிட போகிறார்கள் என்ற கேள்வி நாட்டு மக்களுக்கு உள்ளது.

ஸ்திரத்தன்மை இல்லாத அரசியல் கட்சி ஒன்று தேர்தலில் போட்டியிடுவதால், ஏற்படும் நிலைமை தெளிவானது.

கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்த பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தேவையான நிதி இல்லாத காரணத்தினால் நின்று போயுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி கடந்த காலம் முழுவதும் நாட்டை அழித்து பிரிவினைவாதத்திற்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்தது என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.