January 06, 2020

உண்மையிலேயே இந்திய முஸ்லீம்கள் யார்..? அவர்கள் இந்தியாவின் வேர்கள்பாகிஸ்தானிலிருந்து வந்தவர்களா? இல்லை வேற அரபுநாடுகளை சேர்ந்தவர்களா ?

அவர்கள் எங்கிருந்தோ தனியாக குதித்து இங்கே வந்துவிடவில்லை ..நம் தாத்தன் பாட்டன் பூட்டன் காலத்திற்கு முன்பே நாம் எப்படி இந்த மண்ணில் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து பிறந்து வாழ்ந்து மடிந்து வந்திருக்கிறோமோ அதை போலவே அவர்களும் வாழ்ந்து வருகிறார்கள்

இந்தியாவிற்கு சுதந்திரம் வெறும் ஹிந்துக்கள் மட்டுமே போராடி கிடைத்து விடவில்லை ..இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு பல துறைகளில் முன்னேறியதில் வெறும் இந்துக்கள் மட்டும் உழைத்து வந்து விடவில்லை ...இதை படியுங்கள் ..புரியும்...

இஸ்லாமிய சமூகத்திலிருந்து பெண்கள், வழக்கறிஞர்கள், மன்னர்கள், தியாகிகள், பத்திரிகையாளர்கள், படைப்பாளிகள், மதகுருமார்கள் என அவர்களும் தான் சேர்ந்துதான் பாடுப்பட்டார்கள்

முதல் சுதந்திரப் போர் என வர்ணிக்கப்படும் 1857 #சிப்பாய்க் கிளர்ச்சியில் பங்கேற்ற பேகம் ஹஸ்ரத் மஹால், இந்தியாவின் முதல் பெண் அமைச்சரான மசுமா பேகம், #பகத்சிங் விடுதலைக்காகச் சட்டப் போராட்டம் நடத்திய #முகமது ஆசிப் அலி, இரு தேசக் கொள்கையை எதிர்த்த டாக்டர் சையது முகமது, மாணவராக இருந்த போதே சுதந்திரப் போராட்டத்தில் இணைந்த டாக்டர் சாதிக் அலி, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட டாக்டர் குன்வர் முகமது அஷரப், சீர்திருத்தக் கருத்துகளை முன்வைத்துப் போராடிய ஆகா சுல்தான் முகமது ஷா என இன்னும் கணக்கிலடங்கா இஸ்லாமியர்களின் பங்கு அதிகம்

பிரபல எழுத்தாளர் #குஷ்வந்த்சிங் "இந்திய சுதந்திரப் போராட்டத்தில சிறைக்கு போனவர்களும் சரி உயிர்களை தியாகம் செஞ்சவங்களும் சரி இஸ்லாமியமக்கள் தொகையின் விகிதாச்சாரத்தோடு ஒப்பிடறப்ப மிக அதிகமாகவே இருந்திருக்கிறார்கள்..!!"
என்று சொல்லி இருக்கிறார்

#நேதாஜி இந்திய தேசிய ராணுவம் அமைக்க, ஆயுதம் வாங்க யார் அதிகம் நன்கொடை அளித்தது?
நேருவிற்கு பதிலாக நேதாஜியை இந்திய பிரதமர் ஆகி இருக்க வேண்டும் என வாய் கிழிய பேசுபவர்களுக்கு அவருக்கு நன்கொடை அளித்தவர் யார் என்பது தெரியுமா? #மேமன் அப்துல் ஹபீப் யூசுஃப் ... ஒரு கோடி ரூபாய் அதாவது ஏறக்குறைய அவரின் எல்லா சொத்தையுமே தானமாக கொடுத்திருக்கிறார்

கப்பல் ஓட்டிய #வஉசி -க்கு அந்த கப்பலை வாங்கித்தந்தது யார்....?#ஜனாப் ஹாஜி மொஹமத் பக்கீர் சேட் என்கிற முஸ்லிம் .. சும்மா இல்லை... சுமார் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார் ..

#காந்திஜிக்கு தென் ஆப்ரிக்காவில் வேலை போட்டுக்கொடுத்து... அங்கே போக வைத்து அவரை பிரிட்டிஷ் எதிர்ப்புக்கு தூண்டியவர் யார்....?
#தாதா அப்துல்லாஹ்
காந்திதென்னாப்பிரிக்கா போகாமல் இருந்திருந்தால் இந்தியாவின் சுதந்திர வரலாறு கொஞ்சம் வேற மாதிரியாக மாறி இருந்திருக்கும்

#NationalEducationday என்று கொண்டாடுகிறோமே ...அது யாரால்..? எதனால்?
இன்றைக்கு #சுந்தர்பிச்சை கூகுளில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி பெரிய பதவியில் இருக்கிறார் என்று பெருமையில் பூரிக்கிறோமே.. இவர் மட்டுமல்ல இவரை போன்ற பல அறிவுஜீவிகளை உண்டாக்கிய, #The_Indian_Institutes_of_Technology s யை உருவாக்கியவர் யார் தெரியுமா ? நம் சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய கல்வி அமைச்சரும் காந்தியின் மிக நெருங்கிய நண்பருமான #மௌலானா ஆசாத் அவர்கள் ..அவரை Father of IITs என்று அழைப்பார்கள்

அதே போல் இன்றைக்கு பெங்களூரில் இருக்கின்ற உலக தலை சிறந்த கல்விநிறுவனங்களில் ஒன்றான #IISc க்கு அடிக்கல் நாட்டி அதை உருவாக்கியவரும் ஆசாத் தான் இன்றைக்கு இந்திய பல்கலைகழகங்கள் சிறந்து விளங்க அடிநாதமாக விளங்கும் #UGC உருவாக அடித்தளமிட்டவரும் இவரே ..இவரின் பிறந்தநாளையே நாம் இந்தியாவின் National Education day வாக கொண்டாடுகிறோம்

இது போன்ற பல சாதனைகளில் தங்களின் பங்கை செம்மையாக ஆற்றிய இந்திய முஸ்லிம்களை
தேசத்திற்கு எதிரானவர்கள் , துரோகிகள் , தீவிரவாதிகள் , பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று கோஷங்கள் எழுப்புகிறார்கள் ... யாரெல்லாம் என்று பார்த்தால் சுதந்திரத்திற்காக போராடாத ,சுதந்திரமே கொடுக்காதீர்கள் என பிரிட்டீஷாருக்கு ரகசிய கடிதம் எழுதிய , சுதந்திரம் பெற்ற பின் 2002 வரை இரண்டு முறை மட்டுமே கொடி ஏற்றிய, இன்றைக்கு தேசத்தை தனியாரிடம் விற்று கொண்டு நமக்கெல்லாம் தேசபக்தியை பாடம் எடுத்துக்கொண்டிருக்கிற அபூர்வ தேச பக்தர்கள் ..

சரி .. கடைசியாக ஒன்று..நம் தேசியக் கொடி உருவான வரலாறு தெரியுமா உங்களுக்கு?

ஜூன் 3 1947 ல் மவுண்ட் பேட்டன் காங்கிரஸ் & முஸ்லிம் லீக் கட்சிகளிடம் சொல்கிறார். "ரெண்டு நாடா பிரிச்சு கொடுத்திடுறேன்.. ஆனா உங்க கொடிகளின் மூலையில் பிரிட்டிஷ் நாட்டின் சின்னமான யூனியன் ஜாக்கை (சிகப்பு வெள்ளையில், ஒரு பெருக்கல் குறி மீது ஒரு கூட்டல் குறி )வைங்க " என்று கோரிக்கை விடுக்கிறார். ( ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கொடிகளில் தற்போது உள்ளது போல...! )
ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் " உங்ககிட்ட இருந்து விடுதலை வாங்கி அப்புறம் உங்க நாட்டு சின்னமும் கொடியில வைக்கணுமா ? எங்க கொடிகளை நாங்களே வடிவமைச்சிக்கிறோம் " என்று சொல்லிவிட்டார்கள்.
முக்கியமா பிரிட்டிஷின் யூனியன் ஜாக் சின்னத்தை வைக்கவே கூடாது னு முடிவு பண்ணி கொடி வடிவமைக்க ஒரு கமிட்டி அமைக்கிறாங்க

அதில் Dr.ராஜேந்திரபிரசாத் , மௌலானா ஆசாத், ராஜாஜி , சரோஜினி நாயுடு, அம்பேத்கர் என்று பலரும் இருந்து ஆலோசனை செய்கிறார்கள்
அப்போது பக்ருதீன் தியாப்ஜி ( பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய சீஃப் ஜஸ்டிஸ் பாரிஸ்டர் பக்ருதீன் தியாப்ஜி யின் பேரன்) தன் யோசனையை கூறும்போது , காந்திஜி "கொடியின் நடுவில் ராட்டை வேண்டும்" என்கிறார் .

தேசிய கொடியில் ராட்டையை வைப்பதை விட அசோக சக்கரம் வைத்தால் சமச்சீராக இருக்கும் என பக்ருதீன் கூற "சரி ..நீயே கொடியை வடிவமைத்து எடுத்துக்கொண்டு வா ..!"என்கிறார் காந்தி
பக்ருதீன் தன் மனைவி சுரைய்யாவிடம் சொல்லி , அந்த பெண்மணியும் மேலே காவி , கீழே பச்சை , நடுவில் வெள்ளை அசோக சக்கரத்துடன் மிக அழகாக கொடியை தன் கையாலேயே வடிவமைத்து தர கமிட்டியும் அதை ஏற்றுக் கொண்டு இந்திய தேசிய கொடி யாக அங்கீகரிக்கிறார்கள்

தேசிய கீதம் பின்னணியில் ஒலிக்க தேசியக்கொடி யை காணும் ஒவ்வொரு முறையும் நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் அதை வடிவமைத்தது ஒரு இஸ்லாமிய பெண்மணி என்பதை....


இந்திய நாட்டின் சுதந்திரம் இந்து முஸ்லீம் சீக்கியர்கள் என நம் எல்லாருடைய கூட்டு தியாகத்தால் பெறப்பட்ட ஒன்று... உரிமை உள்ள அனைவருக்கும் இந்த நாடு பொதுவானது....
- பகிரி

4 கருத்துரைகள்:

Very good article.how much Indian Muslims served for their country.these fake nationalist's making people divide and fight.

மிகவும் சிறந்த மதிக்க தக்க கூடிய ஒரு கட்டுரை மனித நேயம் உள்ள ஒவ்வொரு மனிதனும் இதைத்தான் விரும்புவான் என் நாடு நம் மக்கள் என்கிற சிந்தைனை இல்லாதவனை தவிர, இங்கு இரண்டு இனவாத புத்திஸ்வாதீனம் இல்லாத இனத்தை காட்டிக்குடுத்து வயிறு பிழைக்கும் கமெண்ட் பண்ணும் பெயர் அஜன் & அனுஷ்

இந்தியர்கள் என்றும் மிகவும் தெளிவானவரகளாகவே இருக்கினறனர் வயிற்றுப்பிழைப்புக்காக கைபர் கணவாய் வழியாக வந்தவரகளைத் தவிர. அவரகளையும் நாங்கள் வேண்டாமென்று சொல்லவில்லையே. அவரகளும் எங்களுடன் இணையலாம். யார் யாருக்கு இந்தியா சொந்தமோ அவ்அனைவரும் இந்தியாவை இந்திய மண்ணை அனுபவிப்போம்.

India created 2 countries for indian muslims, Pakistan & Bangladesh
they can go there..

Post a Comment