Header Ads



மத்ரசாக்களை தடை செய்வதாககூறி ஆட்சிபீடம் ஏறிய அரசு, இப்போத சிறுபான்மையினரின் ஆட்சியை பெற்றுக்கொள்ள முயற்சி

மதரசாக்களை பதிவு செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என ஹெல பொது சவிய அமைப்பின் தலைவர் பொதுகல ஜினவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மதரசாக்களை தடை செய்வதாக கூறி ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் தற்பொழுது இந்தப் பாடசாலைகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மேலும் எதன் அடிப்படையில் இந்தப் பாடசாலைகள் பதிவு செய்யப்படுகின்றன என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 3ம் திகதி வரையில் 1669 மதரசா பாடசாலைகள் காணப்படுவதாகவும் இவற்றில் 371 பாடசாலைகள் அரபு மொழியில் கற்பிக்கப்படுபவை.

மதரசா பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களை யார் தர நிர்ணயத்திற்கு உட்படுத்துவார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த மதரசா பாடசாலைகளை பதிவு செய்வதற்கு இஸ்லாமிய விவகார திணைக்களத்திடம் ஒப்படைப்பதானது நரியிடம் கோழிகளை ஒப்படைப்பது போன்றதாகும் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மதரசா பாடசாலைகளை பதிவு செய்து பொதுத்தேர்தலில் சிறுபான்மை மக்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. "தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்."
    (அல்குர்ஆன் : 9:32)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.