Header Ads



சண்டித்தனத்தால் தலைவர் பதவியில் இருந்து என்னை அனுப்ப முடியாது, ரணில்

கட்சி தலைவர் பதவியை விட்டு போகத் தயாராக இருப்பதாகவும், சண்டித்தனத்தில் தன்னை அனுப்ப முடியாது என்ற செய்தியை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இன்று சஜித் பிரேமதாசவுக்கு அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து தான் விலகிச் செல்வது கால அட்டவணைக்கு அமைய நடக்கும் என்பதையும் அந்த செய்தியில் உள்ளடக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சஜித் பிரேமதாசவுக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது பிரபல அரசியல்வாதிகள், எதிர்பாராத ஒரு அரசியல்வாதி ஊடாக ரணில் இந்த செய்தியை அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அரசியல்வாதிக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சில தினங்களுக்கு முன்னர் இது சம்பந்தமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

4 comments:

  1. அது சரி தான். சண்டித்தனத்தால முடியாது.
    நரித்தனத்தாலதான் முடியும்.

    ReplyDelete
  2. இப்படியே போட்டி போட்டு கடைசி நேரத்தில் வேட்பாளரை அறிவித்து
    உண்மைக்கு மாறான MCC ஒப்பந்தந்தை ஐக்கிய தேசிய கட்சியின் மீது திணிக்கப்பட்டதையும் கூட கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவு தேர்தலில் தோல்வியுற்று சின்னாபின்னமானார்கள் - இதுவும் ஒரு யுத்திதான் - தேர்தல் நெருங்கும் ம்வரை விளக்க மாட்டேன் விளக்க முடியாது - நான் யார் தெரியுமா என்றெல்லாம் வீரம் பேசி- கட்சி ஆலோசனை கூட்டத்தின் விபாரங்களை மாற்று கட்சிக்கு record அனுப்ப செய்து ஒரு பிளவினை ஏட்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் - படுதோல்வியை சந்திக்கணும் அதுவே இந்த ரணில் Sir கு வேணும் - போங்கடா நீங்களும் உங்க கட்சியும்- மர்சூக் மன்சூர் - தோப்பூர்-07

    ReplyDelete
  3. தைரியமான ஒருசிலர் சேர்ந்து இவரைத்தூக்கி ஊத்தை வாழியில் ஒருமுறை வீசிவிட்டால், அப்போதாவது தன்னுடைய நிலைமையை உணர்வாரா என்பது தான் இப்போது உள்ள இறுதியான முடிவு.

    ReplyDelete
  4. YOU Moosalaya go Go please.. මූසලයා

    ReplyDelete

Powered by Blogger.