Header Ads



பொத்துவில் பகுதியில், மாடறுக்கத் தடை

– ஹனீக் அஹமட் –

பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று புதன்கிழமை தொடக்கம் (29ஆம் திகதி) மறு அறிவித்தல் வரை, மாடறுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் திடீர் திடீரென இறப்பதனால் மறு அறிவித்தல் வரை மாடறுக்கவோ, மாட்டிறைச்சி வாங்கவோ வேண்டாம் என சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.யூ. சமட் தெரிவித்தார்.

பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் 06 மாட்டிறைச்சிக் கடைகள் உள்ளன.

இங்கு நாளொன்றுக்கு 15 தொடக்கம் 20 வரையிலான மாடுகள் அறுக்கப்படுகின்றன.

இந்த நிலையில் அண்மைக் காலமாக ஒவ்வொரு நாளும் மாடுகள் திடீரென மரணமடைந்து வருகின்றன.

சில நாட்களில் 20 மாடுகள் வரையில் இவ்வாறு இறந்துள்ளன எனத் தெரிய வருகிறது.

No comments

Powered by Blogger.