January 06, 2020

சகல தரப்பினருக்கும் எச்­ச­ரிக்கை - முஜிபுர் ரஹ்மான்

(செ.தேன்­மொழி)

முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்­கவின் கைது அர­சாங்­கத்­துக்கு எதி­ராக செயற்­படும் அனை­வ­ருக்கும் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருப்­ப­தாக அமைந்­துள்­ளது. அர­சாங்கம் சர்­வா­தி­கா­ரத்தை பிர­யோ­கிப்­ப­தற்­கான வெளிப்­பா­டா­கவே இது அமை­யப்­பெற்­றுள்­ளது  என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே இதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது, 

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் தலை­மை­யி­லான அர­சாங்கம் ஆட்­சி­ய­மைத்து இரண்டு மாத­கா­லத்தை அண்­மித்­துள்ள நிலையில் எதிர்­க்கட்சித் தலை­வர்­களை கைது செய்யும் வேட்­டையில் இறங்­கி­யுள்­ளது. எமது ஆட்­சிக் ­கா­லத்தின் போது செயற்­ப­டுத்­தப்­பட்ட வேலைத்­திட்­டங்­களை விமர்­சிப்­பது மற்றும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களை கைது செய்­வதை மாத்­தி­ரமே நோக்­க­மாக கொண்­டுள்ள அர­சாங்கம் இது­வ­ரையில் எவ்­வித வேலைத்­திட்­டங்­க­ளையும் முன்­னெ­டுக்­காமல் இருக்­கின்­றது.

முதலில் முன்னாள் அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க, இரண்­டா­வது முன்னாள் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன, மூன்­றா­வ­தாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க ஆகியோர் கைது செய்­யப்­பட்­டுள்ளனர். அர­சாங்­கத்தின் அடுத்த இலக்கு யார் என்­பது தொடர்பில் விரைவில் அறிந்து கொள்ள முடியும்.

அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் கைது நட­வ­டிக்­கை­களின் மூலம் எதிர்க்­கட்­சி­யி­னரின் செயற்­பா­டு­களை கட்­டு­ப்ப­டுத்த முடி­யாது. சட்­ட­வி­ரோத ஆவ­ணங்கள், இறு­வட்­டுகள், கணணி தொடர்பில் சோதனை நடத்­து­வ­தற்கு நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தது. ஆனால் அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்­டி­ருந்த பிஸ்டல் மற்றும் அதன் தோட்­டாக்­க­ளுக்­கான அனு­ம­திப்­பத்­திரம் காலா­வ­தி­யா­கி­யுள்­ள­தாக குறிப்­பிட்டே அவர் குற்­றத்­த­டுப்பு பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டார்.

பிஸ்டலுக்­கான அனு­ம­திப் ­பத்­தி­ரம் வருடந்தோறும் புதுப்­பிக்­கப்­பட வேண்டும் என்­பது தொடர்பில் நாங்கள் அறிந்­தி­ருக்க வில்லை. இதனை பாரிய குற்றச் செய­லா­கவும் நாங்கள் எண்­ண­வில்லை. ரஞ்சன் அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள் மற்றும் உறுப்­பி­னர்கள் அனை­வ­ரையும் பெரிதும் விமர்­ச­னங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தி­யுள்ளார்.

எதிர்­க்கட்­சி­யினர் என்­ற­வ­கையில் அர­சாங்­கத்தின் பல அமைச்­சர்கள், அரச அதி­கா­ரிகள், பொலிஸார் மற்றும் இரா­ணு­வத்­தினர் என பலர் எம்­மிடம் தொடர்­பு­கொள்­வார்கள். அவர்­க­ளுக்கு அர­சாங்­கத்­தினால் ஏதா­வது பாதிப்பு ஏற்­பட்டால் அது தொடர்பில் அவர்கள் எம்­மிடம் தெரி­விப்­பார்கள். இந்­நிலைமை எமது ஆட்­சிக்­கா­லத்தின் போதும் இருந்­தது. எங்­க­ளது ஆட்­சியில் இடம்­பெறும் தவ­று­களை எங்­க­ளுடன் இணைந்து செயற்­பட்ட தரப்­பி­னரே எதிர்­க்கட்­சிக்கு தெரி­வித்­தி­ருந்­தனர். இந்த சந்­த­ர்ப்­பங்­களின் போது எதிர்­த்த­ரப்­பினர் எம்­மீது பெரும் விமர்­ச­னங்­க­ளையும் மேற்­கொண்­டி­ருந்­தனர். இது போன்ற செயற்­பா­டு­களை சட்­ட ­விரோத செயற்­பா­டு­க­ளாக கரு­த­மு­டி­யாது.

ரஞ்­சனின் கைது அனைத்து அரச அதி­கா­ரி­க­ளுக்கும் எச்­ச­ரிக்கை விடுக்கும் வகை­யிலே அமையப் பெற்­றுள்­ளது. அர­சாங்­கத்துக்கு எதி­ராக செயற்­படும் அனை­வ­ருக்கும் அர­சியல்வாதி­களின் கைது மூலம் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. அர­சாங்கம் எதேச்­ச­தி­கார ஆட்­சியை முன்­னெ­டுத்து வரு­வ­தற்­கான வெளிப்­பா­டா­கவே  இது அமை­யப்­பெற்­றுள்­ளது.

2015 ஆம் ஆண்­டுக்கு முன்னர் ஆட்­சியில் இருந்த அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட செயற்­பா­டு­க­ளையே தற்­போ­தைய அர­சாங்­கமும் மேற்­கொண்டு வரு­கின்­றது. எமது தனிப்­பட்ட தொலை­பேசி அழைப்­புகள் தொடர்­பிலும் அர­சாங்கம் ஆராய்ந்து பார்க்­கின்­றதா என்­பது தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். ஏன் என்றால் ரஞ்சனின் வீட்டில் சோதனைகளை மேற்கொள்ள வந்த பொலிஸார் அவரது தொலைபேசி அழைப்பு தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்த விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறான அடக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்றார்.

1 கருத்துரைகள்:

As we expected you will never and ever publish our comments against to him GOOD JOB ADMIN

Post a comment