Header Ads



சிறைச்சாலைக்கு சென்று, சம்பிக்கவை சந்தித்தார் ரணில்


கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை நலன் அறிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று மாலை அங்கு சென்றிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ஆசு மாரசிங்க, சிட்னி ஜயரத்ன உள்ளிட்டோர் ரணில் விக்ரமசிங்கவுடன் வெலிகடை சிறைச்சாலையில் உள்ள விளக்கமறியல் சிறைக்கு விஜயம் செய்தனர்.

சம்பிக்க ரணவக்கவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ரணில் விக்ரமசிங்க,

சம்பிக்க ரணவக்கவை சந்தித்து நாங்கள் கலந்துரையாடினோம். குறிப்பாக சில தினங்களுக்கு முன்னர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை என நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதன்பின்னர் நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மீறி அவரை கைது செய்தனர். கைது செய்த பின்னரே சபாநாயகருக்கு அறிவித்தனர்.

கட்சித் தலைவர்கள் இது குறித்து சபாநாயகருடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளோம். சம்பிக்க ரணவக்கவை இரவில் கைது செய்தவதற்கான காரணங்கள் எதுவுமில்லை.

பிரச்சினை இருந்தால், அவரை காலையில் வருமாறு அழைத்திருக்கலாம். இவற்றை பெரிய பிரச்சினையாக நாங்கள் பார்க்கின்றோம் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.