Header Ads



ஜனாதிபதி கோட்டாபயவுக்கு, போப் பிரான்சிஸ் பாராட்டு

நத்தார் தினத்தினை பாதுகாப்பான முறையில் கொண்டாடுவதற்கு வழி ஏற்படுத்திய இலங்கை அரசாங்கத்தை போப் பிரான்சிஸ் வெகுவாக பாராட்டியுள்ளார்.

நத்தார் தினமான இன்று உலக கிறிஸ்தவர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னர் வரும் முதல் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் என்பதால் மக்கள் மனங்களில் அச்ச உணர்வு இருந்தது.

எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்த கோரிக்கையினை அடுத்து ஜனாதிபதி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததோடு, நாடு முழுவதிலும் உள்ள தேவாலயங்களுக்கு இராணுவ பாதுகாப்பினை வழங்கியிருந்தார்.

இது தொடர்பில் வத்திக்கானின் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா தேவாலய ஆராதனையின் போது போப் பிரான்சிஸ் இலங்கை அரசாங்கம் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டியிருக்கிறார்.

கடவுள் அனைவரையும் நேசிக்கிறார், தீமை செய்பவர்களுக்கு இரக்கம் காட்டுகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவ் ஆராதனையில் உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் கலந்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.