Header Ads



இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தும் பாசிசத்தால், மோதி அரசின் இந்தியா இந்து தேசமாகிச் செல்கிறது - இம்ரான்

இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தும் பாசிச சித்தாந்தத்தால், நரேந்திர மோதி தலைமையிலான அரசின் கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா இந்து தேசமாவதை நோக்கிச் செல்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

"பன்மைத்துவம் கொண்ட இந்தியாவை விரும்புபவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள். இது மிகப்பெரிய மக்கள் இயக்கமாகவும் மாறி வருகிறது," என்றும் இம்ரான் கான் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

"அதே சமயத்தில் 'இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு - காஷ்மீர்' என்று அவர் குறிப்பிடும் இந்திய ஆளுகையின்கீழ் உள்ள காஷ்மீரில் இந்தியப் படைகள் குவிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. படைகள் திரும்பபெறப்பட்டால் அங்கு ரத்த ஆறு ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."

இந்தியாவில் போராட்டங்கள் அதிகரிப்பதால் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. இந்திய ராணுவத் தளபதியின் சமீபத்திய கூற்றும் ராணுவ நடவடிக்கை பற்றிய பாகிஸ்தானின் கவலைகளை அதிகரித்துள்ளது என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடு எல்லைக் கோட்டில் நிலைமை எப்போது வேண்டுமானாலும் மோசமாகலாம் என்று இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் சமீத்தில் தெரிவித்திருந்தார்.

நான் ஏற்கனவே பல முறை சர்வதேச சமூகத்திடம் கூறியுள்ளதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனைகளில் இருந்து திசை திருப்ப ராணுவ நடவடிக்கை எதாவது எடுத்தாலும், இந்து தேசியவாதத்துக்கு ஆதரவு திரட்ட போர் வெறியைத் தூண்டினாலும், பொருத்தமான பதிலடி தருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

3 comments:

  1. All credit goes to one and only Modi.

    ReplyDelete
  2. There you are, Imran Khan.

    ReplyDelete
  3. Hon. I.Khan is a great and descent politician not a third class racist like N. Modi...

    ReplyDelete

Powered by Blogger.