Header Ads



பதவியிலிருந்து விலகுமாறு, அநுரகுமாரவுக்கு அழுத்தமா..?

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கு அனுரகுமார திஸாநாயக்க பொறுப்பு ஏற்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர்கள், அவரிடம் கூறியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது அரசியல் சபைக் கூட்டத்தில் சூடான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

அனுரகுமார திஸாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பானவர் எனவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இரண்டாவது விருப்பு வாக்கை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குமாறு பிரசாரம் செய்தமை ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கு காரணம் எனவும் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 7 லட்சம் வாக்குகளை பெற்றது எனவும் ஜனாதிபதித் தேர்தலில் 4 லட்சத்து 8 ஆயிரம் வாக்குகளை மாத்திரமே பெற முடிந்ததாகவும் முழு தேர்தல் முடிவில் இது 3 வீதம் எனவும் இதனால், ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணத்தையும் இழக்க நேரிட்டதாகவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.