Header Ads



கட்சியின் தலைமைத்துவம் இன்றி, பிரதமர் வேட்பாளராக போட்டியிட போவதில்லை - சஜித் அதிரடி பிரகடனம்

கட்சியின் தலைமைத்துவம் இன்றி பிரதமர் வேட்பாளராக போட்டியிட போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கட்சியின் தலைமைத்துவம் இன்றி பிரதமர் வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை. எனினும், கட்சியின் பெரும்பான்மையினர் அதனை விரும்பவில்லை என்றால் பின்வாங்கவும் தயார்.

ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டால் மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே எனது ஆரம்ப நிலைப்பாடு.

எனினும், அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறி, கட்சி தலைவராக நியமிக்கப்படாமல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், கட்சியின் தலைமைத்துவம் இன்றி பிரதமர் வேட்பாளராக போட்டியிட போவதில்லை என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததையடுத்து, தற்காலிக ஓய்வு பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச மீண்டும் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் உடன் மாற்றம் செய்யப்பட வேண்டும் என அந்த கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக சஜித் பிரேமதாசவிடம் கட்சியின் தலைமைத்துவத்தை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், எதிர் கட்சி தலைவராக சஜித் பிரேமதாச அண்மையில் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், எதிர்வரும் பொது தேர்தலில் சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஐக்கிய தேசியக் கட்சியினர் மத்தியில் வலுப்பெற்றது.

இது குறித்து கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த பின்னணியில் தாம் தொடர்ந்தும் கட்சியின் தலைமைத்துவத்தில் இருக்க போவதில்லை என ரணில் விக்ரமசிங்க நேற்று அறிவித்திருந்தார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தற்காலிக ஓய்வில் இருந்த சஜித் பிரேமதாச இன்று மீண்டும் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையிலேயே, கட்சியின் தலைமைத்துவம் இன்றி பிரதமர் வேட்பாளராக போட்டியிட போவதில்லை என சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

1 comment:

  1. Talaimathtuwam kidaithalum ungalukku tolvi nichchayam.

    ReplyDelete

Powered by Blogger.