Header Ads



ஐதேக தலைமையை ஏற்க, கரு நிபந்தனை விதித்தாரா..?

ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைத்து அதனை வெற்றிக்கு இட்டுச் செல்வதற்கு கட்சி தமக்கு அந்தப் பொறுப்பை வழங்குமானால் சில நிபந்தனைகளுடன் அதனை ஏற்றுக்கொள்ள தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சமூகத்தினரிடம் கலந்துரையாடும் போதே சபாநாயகர் கரு ஜயசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“கட்சிக்கு தேவையான மறுசீரமைப்பு மேற்கொள்ளும் அதிகாரம் தமக்கு வழங்கப்படவேண்டும். தற்போதைய கட்சியின் தலைவர், பிரதித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற குழு ஆகியனவற்றின் பூரண இணக்கப்பாடு மற்றும் ஆசீர்வாதத்தோடு அந்தப் பொறுப்பு தமக்கு வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு கட்சியின் அனைத்து தரப்பினரதும் இணக்கமிருந்தால் அதனை மேற்கொள்வதற்கு தாம் தயாராக இருக்கின்றேன். எனினும் கட்சியில் ஒருபோதும் தமக்கு எந்தப் பதவிகளும் அவசியமில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்துள்ள இலட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தாம் அந்தக் கடமையை நிறைவேற்ற தயாரென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.