Header Ads



10 அமைச்சர்களுக்கு எதிராக 2 வாரங்களுக்குள் வாக்குமூலத்தையாவது பெறுங்கள்

கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகித்த 10 அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு சம்பந்தமாக அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அவர்களிடம் வாக்குமூலத்தையாவது பெறாது போனால், தற்போது அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை ஆரம்பிப்பது குறித்து பிக்கு அமைப்புக்கள் கவனம் செலுத்தி வருவதாக இராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் தூதரகத்தின் நாடகம், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல், மத்திய வங்கி மோசடி, வில்பத்து வன அழிப்பு உட்பட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பான கோப்புகள் சாட்சியங்களுடன் விசாரணைப் பிரிவுகளிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது பாரதூரமான பிரச்சினை எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அன்றைய எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து விளக்கமறியலில் வைத்த பின்னர் விசாரணைகள் நடத்தப்பட்டன.

இதனை தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு நினைவூட்ட விரும்புவதாகவும் சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. கக்குகிறது துவேசம்,இந்த துவேசிகள் அழிந்து நாடு நலம் பெற எமது பிராத்தனைகள்.

    ReplyDelete
  2. Very Good . Keep on fighting for justice of our country...

    ReplyDelete
  3. These Monks represents 65% of Singalese people who voted for our president.
    If he does not work for them, he will loose in the Parliament election

    ReplyDelete

Powered by Blogger.