Header Ads



யாழ் ஒஸ்மானியா கல்லூரி முன்னாள் அதிபர் MARA றஹீம்

- பரீட் இக்பால் -

யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த பிரசித்த ஆலிம்களில் ஒருவரான அéபக்கர் தாëத் ஆலிம் அவர்களுடைய மகன்களில் ஒருவரான முஹம்மது அப்துர்ரஹ்மான் - சஹரா பீவி தம்பதியினருக்கு 1941 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி அப்துர் றஹீம் பிறந்தார்.  சாண்டோ முஹம்மது லெப்பை - இவரது பெரியப்பா ஆவார்.

அப்துர் றஹீம் தனது ஆரம்பக் கல்வியை யாழ் மஸ்ற உத்தீன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ் வைத்தீஸ்வரா கல்லூரியிலும் கற்றார். இவர் முன்னாள் அரச அதிபர் மர்ஹூம் எம்.எம்.மக்éல் அவர்களுடன் ஆரம்ப காலம் தொட்டு கல்வி கற்றவரும் நெருங்கிய நண்பருமாவார்.
இவர் பொருளாதார இடர் காரணமாக க.பொ.த(சாÆத) வரை 1958 இல் நிறைவு செய்து 03-06-1959 அன்று வவுனியா சாலம்பைக் குளம் முஸ்லிம் வித்தியாலயத்தில்  ஆசிரியர் நியமனம் பெற்றார். 1961- 1962 காலப்பகுதியில் கண்டி முஸ்லிம் ஆசிரியர் கலாசாலையில் பயின்று பயிற்றப்பட்ட ஆசிரியரானார்.

இவர் 1963 இல் விடுமுறை காலங்களில் ஜனாப். எம்.எஸ்.ஏ. றஹீம் ஆசிரியர் அவர்களுடன் இணைந்து க.பொ.த. (சாÆத) மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் ஒழுங்கு செய்து கற்பித்து பரீட்சை முடிவில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற வழிவகுத்தார். மர்ஹும் ஜலீல் ஆசிரியர், நீர் கொழும்பு விஸ்டம் பணிப்பாளர் எம். எச். சலிம் ஆகியோருடன் இணைந்து யாழ்ப்பாண முஸ்லிம் முன்னேற்ற இயக்கத்தின் தலைவராக இருந்து சேவை புரிந்தார். யாழ்ப்பாணத்தில் தனவந்தர்களின் உதவியுடன் மூங்கில் சந்தூக் அறிமுகம் செய்த குழுவில் இவரும் இணைந்து செயற்பட்டார். இவர் மீரானியா கல்லூரியில் இலவச மீட்டல் வகுப்புகளை ஓழுங்கு செய்து திறம்பட உழைத்தார். 

1963-1970 வரை குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல, மாகோ, பொல்கஹவெல எனும் ஊர்களில் ஆசிரியராக சேவையாற்றினார். கற்பித்தலுடன்  மேலதிகமாக விளையாட்டு போதனாசிரியர், சாரண ஆசிரியர், மல்யுத்த பயிற்றுனர் போன்ற விடயங்களிலும் சேவையாற்றினார். விசேடமாக 'கோதா' அமைத்து மல்யுத்த போட்டிகளை மாணவர்கள் மத்தியில் நடாத்தி முன்னாள் தம்பதெனிய பராளுமன்ற உறுப்பினர் ஆர்.ஜி சேனநாயக்க அவர்கள் (இரட்டை பாராளுமன்ற பிரதிநிதி) இவருக்கு விருதி வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். 
இவர் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது – சித்தி பாத்திமா தம்பதியினரின் மகள் ஹவ்லா ஆசிரியை அவர்களை 06.02.1969 இல்  திருமணம் முடித்தார். அப்துர் றஹீம் -  ஹவ்லா தம்பதியினருக்கு முத்தான மூன்று பிள்ளைகள். (ஒரு ஆணும் இரண்டு பெண்களும்) மூத்த மகள் மிஸ்ரியா ஹாபிஸ் முன்னாள் ஒடிட்; எக்சிகிêடிவ் - நோலிமிட், மகன் சிராஜ் - சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேடர் - துறைமுக அதிகார சபை கொழும்பு. ரோஸானி ரிஸ்வி- முன்னாள்  கொம்பிêட்டர் ஒப்ரேட்டர் டைப்பிஸ்ட் ஆவார்கள்.  

1971- 1974 காலப்பகுதியில் யாழ் சென் ஜேம்ஸ் மகாவித்தியாலயம், யாழ் கொட்டடி நமசிவாயம் வித்தியாலயத்திலும் ஆசிரியராக கடமையாற்றினார். இக் காலகட்டத்தில் பேராதனை பல்கலைக் கழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பை நிறைவு செய்து 1972 இல் பட்டதாரியானார். 

1975 இல் இவர் அநுராதபுரம் கலாவௌ முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு அதிபரானார். 03.04.1980 இல் யாழ் ஒஸ்மானியா கல்லூரி அதிபரானார். இவருடைய காலத்தில் தான் 'கசியானுஸ்' எனும் மாணவர் க.பொ.த (உÆத) பரீட்சையில்  சித்தியடைந்து பொறியியல் துறைக்கு பல்கலைக்கழகம் தெரிவானார் என்பது ஆனது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

1981 இல் இவர் கல்வி நிர்வாக சேவையில் தரம் மூன்றில் பதவி உயர்த்தப்பட்டார். 1982 இல் இவர் சëதி அரேபியா ரியாத்தில் மன்னர் அப்துல் அஸீஸ் மிலிடரி அகடெமியில் நிர்வாக அதிகாரியாக தொழிற் புரிந்தார். அந்த காலகட்டத்தில் சëதி அரேபியாவிலிருந்த யாழ் முஸ்லிம்கள் நலன் கருதி யாழ் முஸ்லிம் நலன்புரி சங்கத்தின் தலைவராக இருந்து யாழ் முஸ்லிம் இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் உதவியாகவும் இருந்தார். 1990 இல் இவர் வேலணை கோட்டக் கல்வி பணிமனைக்கு உதவி கல்விப் பணிப்பாளராக பணியாற்றினார். 1990 பிற்பகுதியில் கல்வி வெளியீட்டு திணைக்களத்தில் உப பத்திராதிபர் பதவி நிலையில் பணியாற்றினார். இவர் 01.01.1991 இல் அரசபணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

ஓய்வு பெற்ற பின்னர் இவர் கொழும்பு மக்கள் வங்கி சர்வதேச கிளையில் உயர் அதிகாரிகளுக்கு ஆங்கில, சிங்கள விளக்க உரைகளுடன் தமிழ் மொழி கற்பித்தார். இப் பணியைத் தொடர்ந்து இவர் பாகிஸ்தான், ஈரான் தூதரகங்களில் கலாசார நிலையங்களில் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். இவர் வெள்ளவத்தை, தெஹிவளையிலுள்ள சர்வதேச பாடசாலைகளில் அதிபராகவும் பணியாற்றியுள்ளார். 

இவர் ஆசிரிய சேவையில் இணைந்த காலத்தில் மஞ்சரி பத்திரிகையில் கதைகள், கட்டுரைகள் எழுதினார்.  இந்தியாவில் வெளியான வாராந்த பத்திரிகையான ஆதித்தியா பத்திரிகையில் 'மோகத்தில் விளைந்த முத்து' எனும்  தலையங்கத்தில் ஒரு தொடர் கதையை எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும.; இவர் 2015 இல் விடிவெள்ளி பத்திரிகையில் 'சுவனத்தின் சோபனங்கள்'; எனும் தலையங்கத்தில் முதற் கவிதையொன்றை 28.03.2015 இல் எழுதி பிரசுரமானது. அதனை தொடர்ந்து விடிவெள்ளியில் கவிதைகள் கட்டுரைகள் பல எழுதினார். 

எம்.ஏ.ஆர்.ஏ றஹீம் அவர்களிடம் கல்வி பயின்ற மாணவர்கள் வைத்தியர்களாகவும் பொறியியலாளராகவும் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் விளங்குகின்றனர். குறிப்பிடத்தக்கதாக பத்தரமுல்லை இசுறுபாய, கல்வி அமைச்சு நிர்வாகதத்தில் மேலதிக செயலாளராக தற்போது பணியாற்றும் பி. சலாஹுத்தீன் அவர்கள் இவரது மாணவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எம்.ஏ.ஆர்.ஏ றஹீம் அவர்கள் யாழ் முஸ்லிம் சமுதாயத்திற்கு மென்மேலும் சேவை செய்ய முன்வர வேண்டும் என்றும் நோயின்றி நீடூழி வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்.

1 comment:

  1. Dear Admin I am very impressed lease publish more article like them at least one a week. also I saw recently my well knowing person through your article Mr.Azeez master during book publish I saw his face almost after 18-20 years please publish the article to know more about him.

    ReplyDelete

Powered by Blogger.