November 15, 2019

"ஞானசார சீடர்கள் உங்கள் படத்தை, பிரேம் பண்ணி வைப்பார்கள்"

மைத்ரி ஐயா,

வணக்கம்...

இன்றுடன் 15.11.2019 விடைபெறுகிறீர்கள்...

நல்லது...

உங்களை தொடர்பு கொண்டு பேச எடுத்த முயற்சிகள் தோற்றுப்போயின...

பரவாயில்லை...

குறை கூறி உங்களை அனுப்ப விருப்பமில்லை அதனால் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்பதால்...

பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருதடவை உங்களிடம் ஒரு கேள்வி கேட்டேன்...

“ புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதன் நிலை என்ன ?”” என்ற எனது கேள்விக்கு “ அதை பாராளுமன்றம் தீர்மானிக்கும்” என்று கூறினீர்கள்... பரவாயில்லை... அதற்கு என்ன ஆனதென கடவுளுக்கும் தெரியுமோ தெரியாது..

சராசரி தலைவர்களுடன் நீங்கள் விதிவிலக்காக இருக்க முடியாது...

இனி ஓய்வுக்காலத்திலாவது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இருங்கள்...

வீட்டார் எதையும் வாங்கிக் கேட்டால் அதனை செய்ய முடியுமா முடியாதா என்று யோசித்துவிட்டு பதில் கொடுங்கள்...

முடியாதவற்றை சரி என்றும் முடிந்தவற்றை இயலாது என்றும் கூறி இந்த பழக்கத்தை அங்கே காட்டிவிடாதீர்கள்...

குறிப்பாக விறைப்பாக இருப்பதாக காட்டிக்கொண்டு பின்னர்... சுந்தர் சியின் காலை பிடித்து கதறிக் கெஞ்சும் வடிவேலு போல “ ஒரு எடுப்பா இருக்குமேன்னு ஒரு பில்டப்புக்கு சொன்னேன்பா..” என்ற ரேஞ்சுக்கு வீட்டாட்களிடம் சென்றுவிடாதீர்கள்...

ஞானசார தேரர் சீடர்களும் ஷ்ரமந்த கைதியின் உறவினர்களும் உங்கள் படத்தை பிரேம் பண்ணி வைப்பார்கள்... ஆனால் அரசியல் கைதிகள் ஆனந்த சுதாகரனின்... ரகுபதி சர்மா குருக்களின் அழுகுரல்கள் உங்களைத் தொடரவே செய்யும்... கடவுளிடம் அதற்காக வேண்டிக்கொள்ளுங்கள்...

மீண்டும் பாராளுமன்றம் வந்து சாதாரண ஒரு மினிஸ்டராக இன்னொரு ஜனாதிபதிக்கு “ சேர்” போடப் போகும் உங்களின் நிலை கண்டு வருந்துகிறேன். பட்.. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் உங்களை நினைவு வரும்போது அந்த வருத்தம் மறைந்துவிடும்...

இன்றைய தினம் உங்களின் மனம் படும் வேதனை எனக்குத் தெரியும்...

“கடன் கொண்டான் நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன்” – என்ற சீர்காழி அருணாசலக் கவிராயர் எழுதிய வரிகள் தான் எனது நினைவுக்கு வருமின்றன...

என்ன செய்ய...

நன்றி
வணக்கம்...

- Sivarajah Ramasamy -

4 கருத்துரைகள்:

Number one liar in the history of SL politics during the election campaign he told he is going to close the air port to catch the thieves...bullshit!

People don't forget him as a liar.....

NEVATHAVARAK DESAPALANAYATA
NOPEMINEVA,

ஏன்டா டேய், சும்மா கெடந்த என்னை ஒரு அதிகாரமும் இல்லாத பதவிக்குக் கொண்டு போய் வச்சு என்னை ஒன்னும் செய்யாதவனாக்கிப் போட்டீங்களடா டேய். நான் ஒங்கக்கிட்ட ஜனாதிபதிப் பதவியாடா கேட்டேன். சாகும் வரையும் ஒரு MP யா ஒரு மினிஸ்டரா இருக்கும் வாய்ப்பை மண்ணாக்கிப் போட்டிங்களேடா பாவிங்களா. My God. இனிம எப்பிடிடா MP ஆகி மினிஸ்டர் ஆகி என்கீழே வேலை செய்த ஒருவனை எப்படிடா "சேர்" னு கூப்பிடுவேன். My God. தம்பி சிவராசா, என்ட மவனே, ஒன்ட அட்வைஸபடி இனி என்ட வீட்டுக்காரர்களோட நடந்துக்குவேன்டா சாமி.

Post a comment