Header Ads



முஸ்லிம் எதிர்ப்பு தலைப்புகள் மூலம், பூச்சாண்டிகளை உருவாக்க வேண்டாம் - இது பசிலின் கட்டளை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் மற்றும் அமெரிக்கா எதிர்ப்பு தலைப்புகள் மூலம் பூச்சாண்டிகளை உருவாக்குவதற்கு பதிலாக கோத்தபாய ராஜபக்சவின் கொள்கை அறிக்கையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பிரதான தேர்தல் பிசாரத்தை ஆரம்பிக்குமாறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தனது கட்சியினருக்கு அறிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான தலைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவது உகந்ததல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக கடந்த சில தினங்களாக பொதுஜன பெரமுன மில்லேனியம் சேலேஞ்ச் கோப்ரேஷன் உடன்படிக்கை எதிர்ப்பை தனது தேர்தல் பிரசாரமாக முன்னெடுத்த போதிலும் இறுதியில் அந்த எதிர்ப்புக்கான புள்ளிகளை சஜித் பிரேமதாசவே பெற்றுக்கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ள பசில் ராஜபக்ச, தேர்தல் நடைபெறவுள்ள இறுதி வாரத்தில் எதிரியிடம் ஆயுதத்தை வழங்குவதற்கு பதிலாக முடிந்தளவுக்கு தமது கொள்கை அறிக்கையை மக்கள் மத்திக்கு கொண்டு சென்று, நடுநிலையான வாக்காளர்களின் ஆதரவை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச தனது நிவாரண பொதியை இந்த வார இறுதியில் அறிமுகப்படுத்த உள்ளதால், சேறுபூசுதல் அல்லது அவற்றுக்கு பதிலளிப்பதற்காக காலத்தை செலவிடாது, கட்சியின் முழு கட்டமைப்பையும் பிரதான தேர்தல் பிரசாரத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்குமாறும் பசில் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 comments:

  1. This information too late sir,bcs already u’re side some racism politicians so hateful speech against Tamil and Muslims community

    ReplyDelete
  2. பசில் ராஜபக்ச வுக்கு இப்பவாவது புரிந்து விட்டது அவர்களை சூழ இருக்கும் இனவாதிகலைப் பற்றி.ஆனால் அங்கே இருக்கும் எமது முஸ்லிம் அரசியல் குழந்தைகள் இன்னும் தெரிந்தும் புரிந்தும் தங்கள் சுயலாபத்துக்காக இன்னும் தெரியாதது போல் ஓர் நடிப்பு.ஆனால் மக்கள் தெளிவாக இவர்களின் ஆட்டத்தை பார்த்துக் கொண்டுள்ளனர்.

    ReplyDelete

Powered by Blogger.